பெண்களே இதோ உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க உதவும் சில டிப்ஸ்

Loading...

%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aeரோமம் இல்லாத சருமம் தான் பெண்களின் அழகான பட்டுப் போன்ற சருமத்திற்கு காரணம். ஆனால் சில பெண்களுக்கு அசிங்கமாக ஆண்களைப் போல் மீசை வளர ஆரம்பிக்கும். இதற்கு ஹார்மோன்கள் தான் முக்கிய காரணம்.

இப்படி உதட்டிற்கு மேல் மீசை போல் வளரும் முடியை நீக்க பல பெண்களும் அழகு நிலையங்களுக்குச் சென்று ‘அப்பர் லிப்ஸ்’ செல்வதுண்டு. ஆனால் இப்படி ஒருமுறை இச்செயலை செய்ய ஆரம்பித்தால், பின் அதனை அடிக்கடி செய்ய வேண்டியிருக்கும். ஏனென்றால் அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி அதிகரித்துவிடும்.

ஆனால் இயற்கை வழிகளை மேற்கொண்டால் அப்பிரச்சனை இருக்காது. இங்கு உதட்டிற்கு மேல் வளரும் முடியின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் சில ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.


கடலை மாவு மற்றும் மஞ்சள்

1 டீஸ்பூன் கடலை மாவுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, பால் ஊற்றி பேஸ்ட் செய்து உதட்டின் மேல் தடவி நன்கு உலர வைத்து கழுவினால், உதட்டிற்கு மேல் வளரும் தேவையற்ற முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். இம்முறையை முகம் முழுவதும் கூட செய்யலாம்.


எலுமிச்சை மற்றும் சர்க்கரை

1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, அதனை அடுப்பில் வைத்து சர்க்கரை உருகியதும் இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் அதனை உதட்டின் மேல் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் தேவையற்ற முடியின் வளர்ச்சியைத் தடுக்கலாம்


பால் மற்றும் மஞ்சள் தூள்

மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன் முகம் முழுவதும் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதன மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.


சோள மாவு மற்றும் பால்

சோள மாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து உதட்டின் மேல் தடவி உலர வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.


முட்டை வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள்

முட்டையின் வெள்ளைக்கருவுடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர்ந்ததும், கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால், தேவையற்ற முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.


அரிசி மாவு மற்றும் தயிர்

அரிசி மாவு மற்றும் தயிர் கூட தேவையற்ற முடியின் வளர்ச்சியைத் தடுக்கும். அதற்கு 1 டீஸ்பூன் அரிசி மாவுடன் தயிர் சேர்த்து கலந்து, உதட்டின் மேல் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், உதட்டின் மேல் முடி வளர்வதைத் தடுக்கலாம்.

Loading...
Rates : 0
VTST BN