பாவ்பாஜி மசாலா தோசை

Loading...

%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9a%e0%af%88வெங்காயம் – 1,
தக்காளி – 1,
மீடியம் உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்தது – 1,
இஞ்சிபூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 2,
பட்டாணி – 1/2 கப்,
குடைமிளகாய் – 2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்,
பாவ்பாஜி மசாலா – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1 டேபிள்ஸ்பூன்,
தோசை மாவு – தேவைக்கு,
சர்க்கரை, கொத்தமல்லித்தழை – சிறிது.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து, சீரகம் தாளித்து, இதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, பின் தக்காளி சேர்த்து நன்கு குழைய விடவும். இத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, குடைமிளகாய், மிளகாய்தூள், உப்பு, சர்க்கரை, பாவ்பாஜி மசாலா, தேவையான தண்ணீர் சேர்த்து பச்சைவாசனை போகும்வரை கொதிக்க விடவும். எல்லாம் சேர்த்து வந்த பின், எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்து இறக்கவும். தோசை வார்த்து அதில் மசாலாவை வைத்து பொன்னிறமாக வந்ததும் வெண்ணெய் தடவி சூடாக பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply