பாவற்கறியின் மகத்துவம்

Loading...

%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8dபாவற்காயின் குணம்தான் கசப்பு. ஆனால் பலனோ மிகப்பரியது. அதன் நன்மைகளை தெரிந்தால் வியந்து போவீர்கள். பாவக்காய் கொடி வகையை சேர்ந்தது. வாரம் ஒரு நாள் சாப்பிடுவதால் வயிற்றில் புழு பூச்சிகள் அழிந்து விடும்.
கொழுப்பு குறையும். குளுகோஸ் அளவு கட்டுப்படும். பாகற்காய் விஷத்தை முறிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளது. அதன் நன்மைகளையும் மருத்துவ குணங்களைப் பற்றியும் இந்த கட்டுரையை தெரிந்து கொள்ளுங்கள்.

விஷக் காய்ச்சல் நிற்க :
பாகற்காயின் இலையை சிறிது சாறு எடுத்து சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ காய்ச்சல் நின்று விடும். நாய்கடிக்கு மருந்து : பாகற்காயின் இலையை பறித்து அரைத்து உடல் முழுவதும் தடவி குளித்தால் நாய்க்கடியின் விஷம் பரவாது.

மாலைக் கண் நோய்க்கு :
ஒரு பிடி பாகற்காயின் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து அரைத்து கண்களைச் சுற்றிலும் பற்று போட்டால் மாலைக் கண் நோயுள்ளவர்களுக்கு கண்பார்வையை நீட்டிக்கச் செய்யலாம்.

சர்க்கரை வியாதிக்கு :
தினமும் பாகற்காயின் இலைச் சாற்றில் ஒரு சிட்டிகை பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
சர்க்கரை வியாதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.

வயிற்றுப் புழுக்களை வெளியேற்ற :
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய். பாகற்காயை தினமும் அரை வேக்காட்டில் வேக வைத்து அதிலிருந்து சாறை எடுத்து குடித்து வந்தால் வயிற்றிலிருக்கும் பூச்சியை அழித்துவிடும்.

சரும வியாதிக்கு :
பாகற்காயி இலையின் சாறெடுத்து அதனை சருமத்தில் தடவி வந்தால் சொறி சிரங்கு போன்ற சரும வியாதிகள் குணமாகும்.

கல்லீரல் பாதிப்புகளுக்கு :
அஜீரணம் மற்றும் இரைப்பை சம்பந்தமான பிரச்சனைகளை போக்குகிறது. பாகற்காயின் இலையை நீரில் கொதிக்க வைத்து அதன் சாறை பிழிந்து அதனை குடித்து வந்தால் இரைப்பை சம்பந்த நோய்கள் குணமாகும்.

ரத்தம் சுத்தமாக :
ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நச்சுக்கள் வெளியேறி ரத்தம் சுத்தமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply