பாஜ்ரா பூரி

Loading...

%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf
தேவையான பொருட்கள்

கம்பு மாவு – 2 கப்
வெள்ளை எள் – 2 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
மாங்காய்த் தூள் – 1 டீஸ்பூன்
நறுக்கிய வெந்தயக்கீரை – 1/2 கப்
பொடித்த சீனி – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
இஞ்சி, பூண்டு விழுது – தலா 1/2 டீஸ்பூன்
உப்பு, தண்ணீர், பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1/2 டீஸ்பூன்


செய்முறை

எண்ணெயைத் தவிர மேலே கொடுத்திருக்கும் அனைத்தையும் பூரி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து, அதன் மேல் எண்ணெய் 1 டீஸ்பூன் தடவி மூடி 15 நிமிடங்கள் வைக்கவும்.
பின் மாவை எடுத்து உள்ளங்கையில் எண்ணெய் பூசிக் கொண்டு நன்கு உருட்டவும். பிசைந்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கை கொண்டு பூரி மாதிரி கையில் மெல்லியதாக பூரிகள் தட்டவும்.
பாத்திரத்தில் எண்ணெயை காய வைத்து ஒவ்வொறு பூரிகளாக பொரிக்கவும். கரண்டி கொண்டு அழுத்தியும் அதன் மேல் எண்ணெயை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றியும் பொரிக்கலாம். திருப்பிப் போட்டு பொரித்து எடுத்து வடித்து பரிமாறவும்.தற்போது சுவையான பாஜ்ரா பூரி தயார்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply