பாகற்காய் பருப்பு குழம்பு

Loading...

%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aaவெங்காயம் – 1
பாகற்காய் – 1
துவரம் பருப்பு – 1/2 கப்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – சிறிது
புளி சாறு – 3 தேக்கரண்டி
வெல்லம் – 3 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
துருவிய தேங்காய் – 3 தேக்கரண்டி


எப்படிச் செய்வது?

கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பாகற்காய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். துவரம் பருப்பு சிறிது எடுத்து குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வதக்கிய காய்யை சேர்த்து வேக விடவும். வெந்த பின் அவற்றை எடுத்து மசித்து ஒரு கடாயில் ஊற்றவும். அதில் சிறிது புளி சாறு, உப்பு, வெல்லம், மிளகாய்த்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அடுப்பை சிம்மில் வைக்கவும். இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும். அவற்றை குழம்பில் ஊற்றி கலக்கவும். சுவையான பாகற்காய் பருப்பு குழம்பு ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply