பருப்பு உருண்டை குழம்பு

Loading...

%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81
துவரம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்,
கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 7,
வெங்காயம் – 1/4 கப்,
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்,
சோம்பு – 1/4 டீஸ்பூன்,
சீரகம் – 1/4 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.அரைக்க…

வெங்காயம் – 1/4 கப்,
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.
குழம்புக்கு…
நறுக்கிய சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – 1,
புளித் தண்ணீர் – 1/4 கப்,
சாம்பார் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
வெல்லம் – 1/2 டீஸ்பூன்.


தாளிக்க…

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1/4 டீஸ்பூன்,
சோம்பு – 1/4 டீஸ்பூன்,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு கொத்து.


எப்படிச் செய்வது?

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் அனைத்தையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, வெங்காயம், கொத்தமல்லித்தழை, சோம்பு, சீரகம், தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்து, உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து கொள்ளவும். அதே மிக்சியில் வெங்காயம், தேங்காய்த்துருவல் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து, கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இத்துடன் சின்னவெங்காயம் சேர்த்து வதக்கி பொன்னிறமாக வந்ததும், தக்காளி, சாம்பார் தூள், உப்பு, வெல்லம், புளித் தண்ணீர் சேர்த்து 10-12 நிமிடம் பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும். பின்பு, அரைத்த விழுது மற்றும் உருண்டை சேர்த்து 4-5 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால் உருண்டை குழம்பு தயார். சூடான சாதம், நெய்யுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply