பருக்களை ஒரே இரவில் போக்குவதற்கான எளிய வழிமுறைகள்

Loading...

%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8dபருக்களால் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் தான் அவஸ்தைப்படுகிறார்கள். பெண்கள் தங்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், அழகைப் பராமரிப்பதற்கு என்று நேரத்தை ஒதுக்கி, சரும பிரச்சனைகளைப் போக்க ஃபேஸ் பேக், ஸ்கரப், ஃபேஷியல் போன்ற பல செயல்களை செய்கிறார்கள்.

ஆனால் ஆண்கள் அப்படி இல்லை. இருப்பினும் தங்களுக்கு வரும் சரும பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளின் மூலம் போக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இங்கு ஆண்களுக்கு வரும் முகப்பருக்களை வேகமாக போக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
முகத்தில் பருக்கள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் குறைந்தது 2 முறை முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனால் முகத்தில் அழுக்குகளின் தேக்கத்தைக் குறைத்து, பருக்கள் வரும் வாய்ப்பைத் தடுக்கலாம். அதிலும் தங்கள் சருமத்திற்கு பொருத்தமான ஃபேஸ் வாஷைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.
ஷேவிங் செய்யும் முன், வெதுவெதுப்பான சோப்பு நீரை தாடியில் தடவி, பின் ஷேவிங் க்ரீம் பயன்படுத்தி, நல்ல தரமான ரேசரால் ஷேவ் செய்ய வேண்டும்.
பருக்கள் வராமல் இருக்க செய்யும் காரியங்களில் முக்கியமானது தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இப்படி தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்ட, சரும செல்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
முக்கியமாக பருக்கள் முகத்தில் வந்தால், அதைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பருக்ககளில் உள்ள சீழ் மற்ற இடங்களில் பரவி பருக்களின் அளவை அதிகரிப்பதோடு, அசிங்கமான தழும்புகளையும் உண்டாக்கும்.
ஒரே இரவில் முகத்தில் இருக்கும் பருக்கள் போக வேண்டுமானால், பருக்களின் மேல் எலுமிச்சை சாற்றினை வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து பயன்படுத்த வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply