பப்பாளியில் இவ்வளவு நன்மைகளா

Loading...

%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aeஇயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் குளுக்கோஸ், இரும்புச்சத்து, உலோகச்சத்து, புரதம், நியாசின், தயாமின், ரிபோஃப்ளேவின், விட்டமின்கள் A, A1, B1, B2 மற்றும் பெப்சின் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான சத்துகளும், சரும அழகிற்கு தேவையான சத்துகளும் அதிக அளவில் நிறைந்து காணப்படுகின்றன.
நன்கு பழுத்த பப்பாளி பழத்தை கூழாக பிசைந்து, அதில் தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
பப்பாளிக்காயை தினமும் கூட்டாக செய்து சமைத்து சாப்பிட்டு வந்தால் குண்டாக இருப்பவர்களின் உடல் எடை குறையும்.
பப்பாளிப்பழத்தை தேனில் தோய்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமாகும்.
வாய்ப்புண் உள்ளவர்கள் பப்பாளிக் காயில் வரும் பாலை எடுத்து புண்ணில் போட்டால், வாய்ப்புண் விரைவில் மறையும்.

பிரசவம் ஆன பெண்கள் உட்கொள்ளும் சாதத்தில் தினமும் பப்பாளிக் காய் குழம்பு செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால், தாய்மார்களின் பால் சுரப்பு அதிகமாகும்.
வீக்கங்கள் காணப்படும் இடத்தில் பப்பாளியின் இலையை அரைத்து, வீக்கங்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், வீக்கம் நாளடைவில் குறையும்.
பப்பாளி விதைகளை அரைத்து, பாலில் கலந்து குடித்தால் நாக்குப்பூச்சிகள் விரைவில் அழிந்து விடும்.
தேள் கொட்டிய இடத்தில் பப்பாளிக் காயின் விதைகளை அரைத்து போட்டால், விஷம் மற்றும் வலி போய்விடும்.
தினமும் காலையில் பப்பாளி பழத்தினை சாப்பிட்டு வந்தால், கண் குறைபாடுகள், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள், கேன்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply