பனீர் பீஸ் புலாவ்

Loading...

%e0%ae%aa%e0%ae%a9%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%af%8d
தேவையானவை:-

பாஸ்மதி அரிசி – 1 கப்,
தேங்காய்ப் பால் – 2 கப்,
பனீர் – அரை பாக்கெட் ( அல்லது அரை லிட்டர் பாலில் பனீர் செய்து துண்டுகள் செய்து கொள்ளவும். ),
பச்சைப் பட்டாணி – 100 கி,
பெரிய வெங்காயம் – 1,
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
பட்டை, கிராம்பு ஏலக்காய் கல்பாசிப்பு – தலா 2,
எண்ணெய் – 2 டீஸ்பூன். ( 10 மிலி ) ,
உப்பு – முக்கால் டீஸ்பூன்,
சீனி – 1 சிட்டிகை ,
கொத்துமல்லித் தழை – 2 டீஸ்பூன்


செய்முறை:-

ஒரு குக்கரில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் கல்பாசிப்பூவைப் போடவும்.
பொறிந்ததும் பொடியாக அரிந்த பெரிய வெங்காயத்தைப் போடவும்.
அது நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கி பாஸ்மதி அரிசியைக் களைந்து சேர்த்து 2 கப் தேங்காய்ப் பால் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும்.
ஆவி போனதும் இறக்கி உதிர்த்து ஆறவிடவும்.
மீதி ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சதுரத் துண்டுகளாக்கிய பனீர், பச்சைப் பட்டாணியை சிம்மில் வைத்து வதக்கவும்.
ஒரு சிட்டிகை சீனி, முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைத்த பாஸ்மதி சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.
கொத்துமல்லி தூவி வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply