நெல்லை எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

Loading...

%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d
தேவையான பொருட்கள்

சிறிய‌ கத்திரிக்காய் 1/4 கிலோ,
சிறிய‌ உருளைக்கிழங்கு 100 கிராம்
சிறிய‌ வெங்காயம் 1/4 கிலோ
அரைக்க‌ தேவையான‌ பொருட்கள்;‍‍‍
மிளகாய்வற்றல் 6,
மிள்கு 1 மேச்சைக்கரண்டி,
தனியா 1 மேசைக்கரண்டி,
வெந்தயம் சிறிது,
சீரகம்1 தேக்கரண்டி,
துவரம்பருப்பு 1தேக்கரண்டி,
பச்சரிசி 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் 4 அல்லது 5 மேசைக்கரண்டி


தயாரிக்கும் முறை

அரைக்க‌ கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தனித்தனியாக‌ வறுத்துக்கொள்ளவும்
அதனுடன் சிறிய‌ வெங்காயம் 3 அல்லது 4 சேர்த்து விழுதாக‌ அரைத்துக்கொள்ளவும்
வெங்காயத்தை பொடியாக‌ அரிந்து வைத்துக்கொள்ளவும்
கத்திரிக்கய்களை நன்கு கழுவி காம்பை எடுத்துவிட்டு பின் பக்கமாக‌ நான்காக‌ வகுந்து கொண்டு அரைத்த‌ விழுதுடன் சிறிது உப்பும் நல்லெண்ணெய் 1 தேக்கரண்டியும் கலந்து ஒவ்வொரு கத்திரிக்காயிலும் அடைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து அரிந்து வைத்துள்ள‌ வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக‌ வதக்கவும்
பின்பு கத்திரிக்காய்களையும் சேர்த்து நன்றாக‌ வதக்கிக் கொண்டு புளியைக் கரைத்து வடிகட்டி ஊற்றி தேவையான‌ உப்பு சேர்த்து நன்றாக‌ கொதித்தவுடன் வேக‌ வைத்துள்ள‌ உருளைக்கிழங்குகளை தோலை நீக்கி முழுதாக‌ அப்படியே குழம்பில் சேர்த்து 5 நிமிடங்கள் கொதித்த பின்பு இறக்கி விடவும்
இதற்கு side dish ஆக‌ உளுந்தம் பருப்பை வேக‌ வைத்து நன்கு மசித்து சிறிது தேங்காய் 1 சிறிய‌ வெங்காயம் சிறிது சீரகம் இவற்றை அரைத்து பருப்புடன் கலந்து கொதிக்க‌ வைத்து கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து தொட்டுக் கொள்ளலாம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply