நெயில் பாலிஷை நீண்ட நாட்கள் பயன்படுத்தணுமா இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க

Loading...

%e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b7%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8dஅழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் பெண்களைப் போன்று ஆண்கள் இல்லை. ஏனெனில் அவர்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள பயன்படுத்தும் பொருட்களைப் பார்த்தால், ஆச்சரியம் தான் அடைவீர்கள். அத்தகைய அழகுப் பொருட்களில் பெண்கள் அதிகம் விரும்பும் ஒன்று தான் நெயில் பாலிஷ். இந்த நெயில் பாலிஷ் நிறைய வண்ணங்களில், வடிவங்களில் மற்றும் சைஸ்களில் கடைகளில் விற்கப்படுகின்றன. அதைப் பார்க்கும் போது பெண்களின் ஆசை அவர்களை வாங்காமல் விடாது. அவ்வாறு கடைக்கு செல்லும் போதெல்லாம் ஆசைக்கு, அணியும் உடைக்கு மேட்சாக வாங்கும் நெயில் பாலிஷ் பாட்டில் சீக்கிரம் காய்ந்து போய்விட்டால், எப்படி இருக்கும்.

ஆகவே அந்த நிலைமையை தடுக்க, நெயில் பாலிஷை எப்படியெல்லாம் வைத்துக் கொண்டால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

* சில பெண்கள் நெயில் பாலிஷ் பாட்டிலை ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். ஏனெனில் இதனால் நெயில் பாலிஷ் வீணாகாமல் இருக்கும். ஆனால் அதையே ஒரு மாதத்திற்கு மேல் வைத்திருந்தால், அவை பின் கடினமாகிவிடும். ஆகவே அதற்குள் அதனை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.

* நெயில் பாலிஷை பாதுகாக்க சிறந்த வழியென்றால் அது, அவற்றை சூரியஒளி இல்லாமல், குளிர்ச்சியான இடத்தில் வைப்பது தான். * நெயில் பாலிஷ் பாட்டிலை எப்போதும் நன்கு மூடி நேராகவே வைக்க வேண்டும். இதனால் அவை வறட்சியடையாமல், அதில் உள்ள பெயிண்ட்டும் நீண்ட நாட்கள் வரும்.

* எப்போதும் நல்ல தரமான நெயில் பாலிஷையே வாங்க வேண்டும். விலைமலிவான நெயில் பாலிஷ் விரைவில் காய்ந்துவிடும். பின் அவற்றை போட்டாலும், அசிங்கமாக இருக்கும்.

* நெயில் பாலிஷ் போடும் போது, பாட்டிலின் முனையை மூடிக் கொண்டே போட வேண்டும். ஏனெனில் காற்று புகுந்துவிட்டால், அவை விரைவில் காய்ந்துவிடும். * நெயில் பாலிஷில் உள்ள பொருட்கள் பிரியாமல் இருக்க, சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை, பாட்டிலின் முனையில் தடவி, பின் நன்கு மூட வேண்டும். இதனால் காற்று புகாமல் இருக்கும். அதுமட்டுமின்றி பாட்டிலை திறக்கவும் எளிதாக இருக்கும்.

* ஒருவேளை நெயில் பாலிஷில் உள்ள எனாமல் வறட்சியடைந்துவிட்டால், அதனை தனியாக எடுத்து, சிறிது நெயில் பாலிஷ் தின்னரை ஊற்றினால் இவை இளகிவிடும். பின் என்ன, மறுமுறை புதிதான நெயில் பாலிஷ் போன்றே பயன்படுத்தலாம். மேலும் அவை நீண்ட நாட்கள் இருக்கும்.

* சில நேரங்களில் நெயில் பாலிஷ் பாட்டிலின் முனைகளில் காய்ந்திருக்கும். இதனால் அதனை திறப்பது கடினமாக இருக்கும். அப்போது ஒரு கப் நெயில் பாலிஷ் ரிமூவரை எடுத்துக் கொண்டு, அதில் இந்த பாட்டிலை சிறிது நேரம் வைத்து, பின் திறந்தால், எளிதில் திறந்துவிடலாம். மேற்கூறியவற்றை நினைவில் கொண்டு, நெயில் பாலிஷ் பாட்டிலை பயன்படுத்துங்கள். முக்கியமாக நெயில் பாலிஷ் போடும் முன், அதனை கடுமையான முறையில் குலுக்கினால், அவற்றில் முட்டைகள் ஏற்பட்டுவிடும். பின்பு அவற்றை வைக்கும் போது, நகத்தின் அழகிய தோற்றம் பாதிப்படையும். ஆகவே குலுக்கியப் பின் 15-20 நிமிடம் கழித்து, பின் வைக்க வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply