நூடுல்ஸ் கட்லெட்

Loading...

%e0%ae%a8%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%af%86%e0%ae%9f%e0%af%8dநூடுல்ஸ் – 200 கிராம்,
வேகவைத்த கலந்த காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, முட்டைகோஸ், காலிஃபிளவர், குடைமிளகாய்) – 1/2 கப்,
வேகவைத்து உரித்த உருளைக்கிழங்கு – 3,
நறுக்கிய பச்சை மிளகாய் – 2,
பெரிய வெங்காயம் – 2,
பூண்டு – 2,
கொத்தமல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
தக்காளி சாஸ்,
பொரிக்க எண்ணெய், உப்பு – தேவைக்கு.

நூடுல்ஸை 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு வேகவைத்து வடித்து தண்ணீரில் அலசி திரும்ப வடித்து வைக்கவும். நூடுல்ஸ், பொரிக்கும் எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அதில் நூடுல்ஸை சேர்த்து மெதுவாக நூடுல்ஸ் உடையாமல் பிசையவும். எண்ணெய் தடவிய கைகளை வைத்து சரிசம எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி கட்லெட் ஆக தட்டி எடுக்கவும். தோசை கல்லை சூடாக்கி நூடுல்ஸ் கட்லெட்டை பொன்னிறமாக இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்து, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply