நீங்களும் பிரேமம் மலர் தான் போங்க

Loading...

%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4ஓவர் மேக்கப் முகத்துக்கு ஆகாது” இது பல பெண்களுக்கு பொருந்தும், சில பெண்களுக்கு பொருந்தவே பொருந்தாது.

ஏனெனில், பல பெண்களுக்கு மேக்கப் போட்டால் தான் அவர்களது முகத்தின் அழகினை பளிச்சென்று காட்ட முடியும். அதுவே பல பெண்களுக்கு மேக்கப் போட்டால் உள்ள அழகையும் கெடுத்துவிடும்.
உதாரணத்திற்கு பிரேமம் படம் மலரை(சாய்பல்லவி) பார்த்திருப்பீர்கள். இவரின் முகத்தில் இருக்கும் இளஞ்சிவப்பு நிற பரு இவரின் அழகுக்கு அழகு சேர்க்கும்.
எதார்த்தமான அழகினை காட்டிக்கொடுக்கும், இதுவே அந்த பருவினை மறைப்பதற்காக ஓவர் மேக்கப் போட்டால், இயற்கை அழகு சொதப்பிவிடும்.
பெண்களின் முகத்தில் முகப்பரு இருந்தால், அது அவர்களுக்கு அழகாகத்தான் இருக்கும். சில பெண்கள் அதனை அருவருப்பாக நினைத்துக்கொண்டு, கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை வாங்கி முகத்தில் பூசாதீர்கள்.
ஆரம்பத்தில் இது உங்களுக்கு தீர்வினை கொடுத்தாலும், நாட்கள் செல்கள் உங்கள் முகத்தின் செல்கள் முதிர்ச்சியடைந்து வயதான தோற்றத்தை கொடுக்கும்.
அவ்வாறு முகப்பரு போகவெண்டுமன்றால் சில இயற்கையான வழிகளும் உள்ளன,
பருக்களை போக்கும் சிறந்த பொருட்களில் எலுமிச்சை சாறும் ஒன்று. அதற்கு தினமும் படுக்கும் போது எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, அதனை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருக்களில் உள்ள நீர்மமானது மற்ற இடங்களில் பரவாமல் இருக்கும். மேலும் பருக்களில் உள்ள கிருமிகளும் அழிந்து, பருக்களும் வற்றிவிடும்.
பருக்களை போக்கும் சிறந்த வழிகளுள் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதும் ஒன்றாகும். ஏனெனில் உடலை சரியாக இயக்குவதற்கான போதிய சத்துக்களான வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருந்தால் தான், உடலானது சரியாக இயங்கும்.
அதிலும் பச்சை இலைக் காய்கறிகள், பெர்ரிப்பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இல்லையெனில் இத்தகைய காய்கனிகளை பருக்கள் உள்ள இடங்களில் அரைத்து தடவி வந்தாலும், பருக்களை போக்க முடியும்
இதனையும் மீறி உங்கள் முகத்தில் பருக்கள் இருந்தாலும், நீங்களும் பிரேமம் மலர் போன்று எதார்த்த அழகியாகத்தான் இருப்பீர்கள்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply