நிலநடுக்க எச்சரிக்கை வழங்கும் ஸ்மார்ட்போன்கள்

Loading...

%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99ஸ்மார்ட்போன்கள் மூலம் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை முன்கூட்டியே பெற முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். ஜி.பி.எஸ். (GPS) உள்ள ஸ்மார்ட்போன்கள் நிலநடுக்கம் ஏற்படுவதை சிறிது நேரத்திற்கு முன்பாகவே உணரும் தன்மையை பெற்றியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலநடுக்க எச்சரிக்கை கருவிகளை கட்டமைத்து பராமரிக்க ஏகப்பட்ட செலவாவதால், உரிய நேரத்தில் நிலநடுக்க எச்சரிக்கையை கொடுக்க முடிவது இல்லை.
இதற்காக ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வகையில் புதிய அப் ஒன்றை உருவாக்கி, நிலநடுக்கம் தொடர்பான எச்சரிக்கையை கொடுக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.
இது தொடர்பாக விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், இந்த முயற்சி வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வந்தால் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அதிகமாக பாதிக்கப்படும் பல நாடுகளுக்கு பெரிய உதவியாக இருக்கும். மேலும் நிலநடுக்கத்தால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் சிறிய அளவிலான நிலநடுக்கத்தை ஜி.பி.எஸ். ஸ்மார்ட்போன்களால் உணரமுடியாது என்றும் அதேசமயம் மிதமான மற்றும் தீவிரமான நிலநடுக்கத்தை அவற்றால் முன்னதாகவே உணர்ந்து எச்சரிக்கை செய்யமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply