தொடர்ந்து வரும் ஏப்பத்தை சரிசெய்யும் இயற்கை வழிகள்

Loading...

%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88சாப்பிட்டு முடித்தப் பின் ஏப்பம் வருவதை திருப்தியாக சாப்பிடதன் அடையாளமாகத் தான் பலரும் கருதுகின்றனர். ஆனால், சிலருக்கு அடிக்கடி ஏப்பம் வரும். இது பல வேளைகளில் எதிர்பாராத அசெளகரியத்தை ஏற்படுத்தும்.

உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் ஏப்பம் வரும். இரைப்பையில் உள்ள காற்றுதான் ஏப்பமாக வருகிறது. இதுவே இந்த காற்றானது, குடலை அடைந்தால், வாய்வாக, மலவாயில் வழியாக வெளியேறும். ஆனால் சிலருக்குத் தொடர்ச்சியாக ஏப்பம் வந்துக்கொண்டே இருக்கும்.
தொடர்ச்சியாக வரும் ஏப்பத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்க்கலாம்.
குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால், ஏப்பத்தில் இருந்து விடுபடலாம். அமிலத்தன்மை உள்ள பானங்களான சோடா போன்றவற்றை ஒரு சிப் குடித்தாலும், அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கலாம். அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பம் வரும் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.
ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடித்தால் ஏப்பத்திலிருந்து நிவாரணம் பெறலாம். சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். இந்த முறையால் உடனே ஏப்பம் நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.
ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், செரிமான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும். ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும். சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.
அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும். தினமும் ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.
இதில் ஏதாவது ஒற்றை தினமும் பின்பற்றி வந்தால் ஏப்பம் வரும் போது மற்றவர் எதிர் அசிங்கப்படாமல் தப்பிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply