தவறுதலாக கீழே விழுந்தாலும் பாதிப்படையாது ஸ்மார்ட்போனாக மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ்

Loading...

%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%87-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%81உலகின் ஏதோவொரு மூலையில் ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் ஒரு ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் உடைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலமாகத் தெரியவந்துள்ளது.
இந்தப் பிரச்னையை சமாளிக்கும் ஸ்மார்ட்போனாக மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் தயாராகியுள்ளது. ஷட்டர்ஷீல்டு தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ள இந்தப் போனின் ஸ்கிரீன் ஐந்தடுக்குகளுடன் உள்ளதால், தவறுதலாக கீழே விழுந்தாலும் பாதிப்படையாது.
உலக ஸ்மார்ட்போன் பயனாளிகளின் கனவினை நினைவாக்கும் வகையிலேயே, மோட்டோரோலா நிறுவனம் இந்த கருவியை வடிவமைத்துள்ளதாக தெரிகிறது. இந்த கருவி ஐபோன்களுக்கு நல்ல பாடம் புகட்டும் ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சந்தையில் பலத்த போட்டியை ஏற்படுத்தும் விதமாக மோட்டோரோலா நிறுவனம், தனது கருவிகளை 2013-ம் ஆண்டில் இருந்து வழங்கி வருகின்றது.
முன்னதாக சிறிய பட்ஜெட் கருவிகளில் கவனம் செலுத்தி வந்த மோட்டோரோலா நிறுவனம், இம்முறை பெரிய பட்ஜெட் கருவிகளுக்கு போட்டியாக புதிய கருவியை வடிவமைத்துள்ளது.

மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம் சங்கள்:

* 5.4 இன்ச் குவாட்-எச்டி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, 2Ghz ஆக்டாக்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர் மற்றும் 3ஜிபி ரேம் உள்ளது.
* மெமரியை பொருத்த வரை 32 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும், உள்ளது.
* ப்ரைமரி கேமரா 21 எம்பி, டூயல் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ் வசதி உள்ளது.
* ஆண்டிராய்டு 5.1.1 லாலிபாப் இயங்குதளம் கொண்டிருப்பதோடு மார்ஷமல்லோ 6.0 இயங்குளத்தை அப்டேட் செய்து கொள்ள முடியும். 3760 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.
* இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் ரூ.25000க்கு விற்பனைக்கு வர உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply