ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்ட ​SPOTIFY

Loading...

%e0%ae%9c%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%afSpotify என்பது பல மில்லியன் கணக்கான பாடல்களை கேட்டுமகிழ உதவும் மிகவும் பிரபல்யமான தளமாகும்.
இதில் பல்வேறு மொழிகளைக் கொண்ட பாடல்கள் பகிரப்பட்டுள்ளதுடன், பல நாடுகளிலும் இச் சேவை வழங்கப்பட்டு வருகின்றது.
எனினும் முதன் முறையாக ஜப்பானில் இச் சேவை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத் தகவலை குறித்த நிறுவனத்தினை உருவாக்கியவரும், அதன் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான Daniel Ek வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் ஜப்பானில் உள்ளவர்கள் ஸ்மார்ட் கைப்பேசி, டேப்லட், டெக்ஸ்டாப் கணணிகள் மற்றும் பிளே ஸ்டேஷன் என்பவற்றில் இச் சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் விளம்பரங்களுடன் கூடிய இலவச சேவை மற்றும் விளம்பரங்கள் அற்ற சந்தா சேவை ஆகிய இரண்டினையும் தமது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம் அற்ற சேவையை பெற மாத சந்தாவாக 980 ஜப்பான் ஜென் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply