செட்டிநாட்டு மீன் கடாய்

Loading...

%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d
தேவையான பொருட்கள்

நறுக்கிய துண்டு மீன் – 300 கிராம்
தக்காளி பேஸ்ட் – 100 கிராம்
வெங்காயம் – 4 (சிறிதாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
நல்ல மிளகு தூள் -1 ஸ்பூன்
புளி கரைசல் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
கடுகு – தேவைக்கு
கறிவேர்பிலை – தேவைக்கேற்ப
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
(தக்காளி பேஸ்ட் கிடைக்காதவர்கள் முழு தக்காளியை தோல் நீக்கி அரைத்து கொள்ளவும்)


தயாரிக்கும் முறை

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, வெங்காயம் போட்டு தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமாக சிவந்ததும் இதனுடன் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும். நன்றாக சேர்ந்ததும் புளி கரைசலை சேர்த்து கிளறி அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், நல்லமிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கும் வரை வதக்கவும், அதில் நறுக்கிய மீன் துண்டுகளை போட்டு தேவைக்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும், சுண்டிய பிறகு கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். தேங்காய் சேர்க்காத இந்த மீன் குழம்பு, சாதம், சப்பாத்தி, பரோட்டா போன்றவைகளுடன் சூடாக சாப்பிடலாம்..! சர்க்கரை வியாதி, கொழுப்பு உணவு சாப்பிடாதவர்களுக்கு மிகவும் நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply