சுவையான முட்டைக்கோஸ் ஸ்டஃப்டு புடலங்காய்

Loading...

%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f
தேவையான பொருட்கள் :

பிஞ்சு புடலங்காய் – அரை கிலோ
முட்டை கோஸ் – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 200 கிராம்
கரம்மசாலா தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
கடலை மாவு – 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு


செய்முறை :

* பிஞ்சு புடலங்காயை 2 இஞ்ச் அளவில் வட்ட வடிவத்தில் வெட்டு உள்ளே இருக்கும் விதைகளை எடுத்து விடவும்.
* முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடலை மாவை வெறும் கடாயில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் முட்டைக்கோஸ், கரம் மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக வதக்கி பின் வறுத்த கடலை மாவைக் கலந்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து பின் இறக்கவும்.
* இந்த கலவையை புடலங்காயில் ஸ்டஃப் செய்ய வேண்டும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஸ்டஃப் செய்த புடலங்காயை வைத்து சுற்றி எண்ணெய் விட்டு இரண்டு புறமும் வேகவைத்து எடுத்தால் ஸ்டஃப்டு புடலங்காய் ரெடி.
* இவ்வாறு குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் புடலங்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply