சத்தான சிவப்பரிசி கேரட் புட்டு

Loading...

%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d
தேவையான பொருட்கள் :

வறுத்த சிவப்பரிசி மாவு – 2 கப்
கேரட் துருவல் – 3/4 கப்
பொடியாக நறுக்கிய (முட்டைகோஸ்) – 1/4 கப்
தேங்காய்துருவல் – 4 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு


செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் கேரட் துருவல், முட்டைகோஸை சேர்த்து அதில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.
* மற்றொரு பாத்திரத்தில் வறுத்த அரிசிமாவை போட்டு சிறிது உப்பு போட்டு கலந்து சுடுத்தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும். மாவு கையால் பிடித்தால் உதிராமல் நிற்கக் கூடிய பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
* பின்னர் அதை ஒரு பெரிய தட்டில் கொட்டி ஒரு சிறிய டம்ளரினால் கொத்தி விடவும்.
* அதன் பிறகு இந்த மாவுடன் தேங்காய் துருவல், கேரட் கலவையை சேர்த்து கலக்கவும்.
* புட்டு குழலில் இந்த மாவை போட்டு ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
* சுவையான சிவப்பரிசி – கேரட் புட்டு தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply