சத்தான அவல் கிச்சடி

Loading...

%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf
தேவையான பொருட்கள் :

சிவப்பு அவல் – அரை கப்,
தோலுடன் கூடிய உடைத்த பாசிப் பயறு – 1 கப்,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி – 2,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 4 பல்,
புதினாவும் கொத்தமல்லியும் தலா – 10 இலை,
சோம்பு – 1 சிட்டிகை,
சீரகம் – 1 சிட்டிகை,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
நெய் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.


செய்முறை:

* அவலை அரை மணி நேரம் நீரில் ஊற வையுங்கள்.
* பயறை இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து வேகவையுங்கள். முக்கால் பதம் வெந்ததும் ஊறவைத்த அவல் (பிழிந்தெடுத்து), மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் நெய் ஆகியவற்றைச் சேர்த்து பத்து நிமிடம் வேக வையுங்கள்.
* வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
* வாணலியில் எண்ணெய், மீதமுள்ள நெய்யை ஊற்றிச் சூடாக்கி, சோம்பு, சீரகத்தைத் தாளித்த பின் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.
* பிறகு அதில் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் அவல், பயறு கலவை, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
* அவல் கிச்சடி ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply