சங்கக்காரா ருசித்த மீன் குழம்பும் சோறும்

Loading...

%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d
தேவையான பொருட்கள்

சுத்தப்படுத்திய மீன் துண்டுகள் – 500 கிராம்
வெங்காயம் – 25 கிராம்
பூண்டு – 5 அல்லது 6 பற்கள்
கறித்தூள் – 3 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
புளி – 25 கிராம்
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாதூள் – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 நெட்டுக்கள்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை

வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதனுடன் கறித்தூள் மற்றும் உப்பு போட்டு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் மீதமுள்ள கறித்தூளையும் வெந்தயத்தையும் போட்டு பிரட்டி விடவும்.
புளியுடன் 250 மி.லி சுடுத்தண்ணீர் ஊற்றி கரைத்து அதை பிரட்டியவற்றுடன் ஊற்றவும்.
இந்த கலவை சூடாகி கொதித்ததும் அதில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை போடவும்.
சிறிது நேரம் கழித்து பாதியளவு வெந்ததும் மீன் துண்டுகளை திருப்பி விடவும். அடிக்கடி கரண்டியை வைத்து கிளறி விடக்கூடாது. குழம்புடன் கரம் மசாலா, கறிவேப்பிலை சேர்த்து விட்டு உப்பு சரிப்பார்த்துக் கொள்ளவும்.
மீன் நன்கு வெந்து குழம்பு கெட்டியானதும் இறக்கி வைத்து சூடாக பரிமாறவும். சுவையான மீன் குழம்பு ரெடி.
இதனுடன் சோறு சமைத்து சாப்பிட்டால் மதிய உணவு திருப்தியாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply