கோதுமை ரவை வெஜிடபிள் புட்டு

Loading...

%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – 2 கப்
பொடியாக நறுக்கி காய்கறிகள் – 1 கப் (கேரட், பீட்ரூட், பீன்ஸ், பச்சை பட்டாணி)
தேங்காய் துருவல் – கால் கப்
சர்க்கரை – 1 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
தண்ணீர் – அரை கப்


செய்முறை :

* கேரட், பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் துருவிய தேங்காய் சிறிதளவு, உப்பு, சர்க்கரை, கோதுமை ரவை, அரை கப் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து ரவையை நன்றாக கலக்கவும். கட்டிகள் இல்லாமல் உதிரியாக கையில் பிடித்தால் உதிரியாக வரும்படி கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் காய்கறிகளை கலந்து 5 நிமிடம் வைக்கவும்.
* புட்டு குழலில் முதலில் சிறிது தேங்காய் துருவல் அடுத்து ரவை கலவை அடுத்து சிறிது தேங்காய் துருவல் என்ற படி மாவை கலவையை நிரப்பவும்.
* இதனை அடுப்பில் வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
* சுவையான சத்தான கோதுமை ரவை வெஜிடபிள் புட்டு ரெடி.
* இதற்கு எந்த காய்கறிகளை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். இந்த புட்டு செய்யும் போது கேரட், பீட்ரூட் போட்டு செய்தால் பார்க்க கலர்புல்லாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply