கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் சீயக்காய் பொடி அரைப்பது எப்படி

Loading...

%e0%ae%95%e0%af%82%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வரலாம். சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

இப்போது சீயக்காய் அரைக்க என்னனென்ன பொருட்களை அதில் போட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

சீயக்காய் பொடி அரைக்க தேவையான பொருட்கள் :

சீயக்காய் – 1 கிலோ
வெந்தயம் – 100 கிராம்
பயத்தம் பருப்பு – 1/4 கிலோ ( பாசிப்பயறு கூட போடலாம், அதாவது தோலுடன் கூட போடலாம் )
காய்ந்த நெல்லி – 100 கிராம் (கொட்டை எடுக்கவும் )
கார்போக அரிசி – 100 கிராம்
பூவந்திக் கொட்டை – 100 கிராம் ( கொட்டைஎடுக்கவும் )
அனைத்து பொருட்களையும் வெயிலில் 2 நாட்கள் வைத்து நன்றாக காய்ந்த பின் மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ள வேண்டும்.
வெட்டி வேர், ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, பெருமாளுக்கு சார்தின ரோஜா பூக்கள், தவனம், மரிக்கொழுந்து போன்றவற்றை காயவைத்து மில்லில் அரைக்கலாம்.
தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சீயக்காய் குழைத்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்றுவிடும்.
ரொம்ப வாசனையாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply