குழந்தையை குளிக்க வைக்க போகிறீர்களா

Loading...

%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது மிக கவனமாக கையாள வேண்டும்.
குழந்தைகளுக்கு பால் கொடுத்த உடனே குளிக்க வைக்கக்கூடாது, குளிப்பதற்கு சிறிது நேரம் முன்போ அல்லது குளிக்க வைத்த பிறகோ தான் பால் கொடுக்க வேண்டும்.
பிறந்த குழந்தையை பாத் டப்பில் வைத்துக் குளிப்பாட்டலாம்.

குளிக்க வைக்கும் போது குழந்தையை குலுக்க தேவையில்லை, காதில், மூக்கிலும் ஊதக்கூடாது.
தினமும் உடலில் எண்ணெய் தடவி குளிக்க வைக்கலாம்.
குழந்தையை தலைக்கு குளிக்க வைக்கும் போது, குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக விற்கப்படும் ஷாம்புவை பயன்படுத்தலாம்.
சிலர் கடலைமாவு, பயத்த மாவை பயன்படுத்துவதுண்டு, இது அவசியமில்லை.
தண்ணீர் கொதிக்க கொதிக்கவோ, சில்லென்றோ வேண்டாம். மிதமான சூடு இருந்தால் போதும்.
குளிக்க வைத்த பிறகு மிக தூய்மையான டவலை கொண்டு துவட்ட வேண்டும்.
குளித்த பின்னர் உடனே சிலர் குழந்தைகளுக்கு பவுடரை அதிகமாக போட்டுவிடுவார்கள். ஒருசில குழந்தைகளுக்கு இது அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.
குழந்தையை குளிப்பாட்டி முடித்த பின் ஈரத்தோடு இருக்கும்போதே விரல் நகங்களை வெட்டி விட்டால் சுலபமாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply