குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது சிறந்ததா ஆபத்தானதா

Loading...

%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2பொதுவாகவே அனைவருக்கும் சிறந்த ஒரு உணவாக பசும்பால் உள்ளது. எனினும் சிறிய குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது சிறந்ததா? கூடாதா? என்ற ஒரு சந்தேகம் அனைவர் மத்தியிலும் உள்ளது.

குழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தியாவதற்கு முன்னர் அவர்களுக்கு பசும்பால் கொடுக்கக் கூடாது. இது எல்லா மருத்துவ நிபுணர்களும் ஒப்புக்கொள்ளும் ஒரு விடயம். அதுவரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் குழந்தைகளுக்கான திட உணவும் சேர்ந்து கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு ஆறு மாதம் பூர்த்தியான பின்னர் அவர்களுக்கான உணவில் சிறிதளவு பசும்பால் சேர்த்துக் கொள்ளலாம். காரணம் பசும்பாலில் சிறந்த ஊட்டச்சத்துகள் உள்ளன. இது உடலை வலிமையாக்க உதவுகிறது. அதிலும் இது சிறந்த புரோட்டீன்கள், கார்போஹைதரேட்டுக்கள், விட்டமின்கள் மற்றும் ஜிங்க் ஆகிய குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளன.
பசும்பாலில் போதியளவு கல்சியம் உள்ளது. இது குழந்தையின் பல் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது. அதிகளவு கல்சியம் மற்றும் ஏனைய சத்துகள் மூலம் இது குழந்தைகளின் தசைக்கட்டுப்பாடு மற்றும் உடல் இயக்கம் ஆகியவற்றை அதிகரிக்கின்றது.
பசும்பாலில் விட்டமின் ஏ, விட்டமின் டி மற்றும் பொஸ்பரஸ் ஆகியவை அடங்கியுள்ளன. இது குழந்தையின் உடலில் கல்சியம் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. மேலும் வாழ்க்கையின் பிற்காலங்களில், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்துகளை இது குறைக்கிறது.
குழந்தைகளுக்கு எப்பொழுதுமே அதிகளவில் பசும்பால் கொடுப்பதில் இருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும். இது சில சமயங்களில் ரத்த சோகையை ஏற்படுத்தலாம். எனவே, நடுத்தரமான அளவு பசும்பாலை அவர்களுக்குக் கொடுப்பது சிறந்தது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply