குங்குமப் பூ சருமத்தை சிவப்பாக்குமா

Loading...

%e0%ae%95%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bfகுங்குமப் பூ இன்று நேற்றல்ல பழ நூற்றாண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் அழகிற்காக உபயோகிக்கத் தொடங்கினர். குங்குமப் பூ அழகின் அடையாளமாக மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

இதில் நிறைய இரும்புசத்தும் ஆன்டி ஆக்சிடென்ட்டும் உள்ளது. பெரும்பாலோனோர் குங்குமப் பூ பூசினால் சிவப்பழகு கிடைக்கும் என நம்புகிறார்கள். நிறம் என்பது நமது மரபணுவில் ஏற்கனவே பதியப்பட்ட தகவல். அதனை மாற்ற முடியாது. ஆனால் சுற்றுப் புறம் அல்லது இன்ன பிற காரணங்களால் நமது உடல் கருமையாக இருந்தால் , பிறந்த போது இருந்த இயற்கையான நிறத்தை மீட்டெடுக்க குங்குமப் பூ உதவும்.

இது கருமையை போக்கி, உங்கள் சருமத்திற்கு பொலிவு தரும். சுருக்கங்களை போக்கும். குங்குமப் பூவைக் கொண்டு எப்படி உங்களை அழகுபடுத்தலாம் என பார்க்கலாம்.குங்குமப் பூ சந்தன மாஸ்க் :

சந்தன பொடியுடன் சில துகள் குங்குமப் பூ கலந்து அதனுடன் சிறிது பால சேர்த்து நன்றக குழைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் ஜொலிக்கும்.முகப்பருக்களை போக்க:

சிறிது பால் எடுத்து அதில் சில துகள் குங்குமப் பூவை போடுங்கள். 3 மணி நேரம் ஊற விடுங்கள். பால் இப்போது வெளிர் மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும். இந்த பாலை ஒரு பஞ்சினால் நனைத்து முகத்தில் த்டவுங்கள் 20 நிமிடம் கழித்து கழுவவும். முகப்பருக்கள் குறைந்து பொலிவுறும்.கருமையை தடுக்க :

சில துளசி இலைகளை பறித்து அதனுடன் சில குங்குமப் பூ வை சேர்த்து சிறிது ரோஸ் வாட்டருடன் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனை முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி வந்தால் கருமை குறைந்து முகம் பளிச்சிடும்.சருமப் பொலிவை பெற :

சில குங்குமப் பூவை ரோஸ் வாட்டரில் ஊற வைத்து அதனுடன் சில துளி கிளிசரின் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். முகத்தை கழுவியதும், இந்த டோனரை முகத்தில் தடவுங்கள். முகம் போஷாக்கு பெற்று பொலிவு உண்டாகும்.சிவப்பழகு பெற :

சூரிய காந்தி விதைகள் மற்றும் குங்குமப் பூ துகள் சிலவற்றை எடுத்து பாலில் இரவு ஊற வையுங்கள். மறு நாள் காலையில் ஊற வைத்தவற்றை அரைத்து முகத்தில் தடவுங்கள். 30 நிமிடம் கழித்து கழுவினால் முகம் நிறம் பெறும்.வறண்ட சருமத்திற்கு :

பால் பவுடர் சிறிது, குங்குமப் பூ துகள், மஞ்சள் ஒரு சிட்டிகை மற்றும் சிறிது ஆலிவ் எண்ணெய் ஆகியவ்ற்றை எல்லாம் சேர்த்து கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். முகம் பட்டு போல் மிருதுவாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply