குங்குமப் பூ ஃபேஷியல்

Loading...

%e0%ae%95%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82-%e0%ae%83%e0%ae%aa%e0%af%87%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8dநம் ஊர் வெயிலுக்கு முகம் சீக்கிரம் கறுத்து விடுகிறது. வெயிலினால் மட்டுமல்ல அளவுக்கதிகமான புகை, தூசு, மாசடைந்த நிலத்தடி நீர், அழகுக்காக நாம் பயன்படுத்தும் பலவிதமான காஸ்மெடிக் பொருட்கள் இப்படி பல காரணங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். முகம் வாடிக் கறுத்து பொலிவிழக்க இங்கே ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. அதே போல முகப் பொலிவை அதிகரிக்கவும் இங்கு ஆயிரமாயிரம் அழகுக் குறிப்புகளும், உணவு முறைகளும் பரிந்துரைக்கப் படுகின்றன என்பதும் உண்மையே!

அழகு நிலையங்களில் முகப் பொலிவுக்கு பழங்களைக் கொண்டு ஃபேஷியல் செய்து விட்டு ஆயிரக் கணக்கில் வசூலித்து விடுவார்கள். கொஞ்சமே கொஞ்சம் பொறுமையும் முயற்சியும் இருந்தால் போதும் இப்படியான நஷ்டங்களில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். எப்படி என்கிறீர்களா? வீட்டிலேயே அருமையாகப் ஃபேசியல் செய்து கொள்ள கற்றுக் கொள்வதைத் தவிர வேறென்ன தீர்வு இருக்க முடியும். இயற்கை நமக்கு அளித்த பொக்கிஷங்களான பழ வகைகளையும், காய்கறிகளையும், ஒரு சில மலர் வகைகளையும் கொண்டு மிக எளிதாக நம்மால் ஃபேஷியல் செய்து கொள்ள முடியும் என்றால் நம்புங்கள்.
சரி இப்போது எளிதில் உடனடியாக செய்து முடிக்க முடியும் என்பதற்குப் பொருத்தமாக ஒரு சிம்ப்பிள் குங்குமப் பூ ஃபேஷியல் டிப்ஸ் பற்றிப் பார்க்கலாம்.
விலை அதிகம் தான், ஆனால் அதற்கேற்ப அதன் பலனும் மிக அதிகம் என்பதால் குங்குமப்பூ எல்லோராலும் விரும்பப்படுகிறது.


தேவையான பொருட்கள்:

குங்குமப் பூ – நான்கு இழைகள்
சந்தனப் பொடி – 1 டீ ஸ்பூன்
காய்ச்சாத பால் – 2 டீ ஸ்பூன்
ஃபேஷியல் செய்யும் முறை:
மேலே குறிப்பிடப்பட்ட பொருட்களை எல்லாம் ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு நன்கு கலக்கவும். கலந்ததும் கிடைக்கும் சந்தனம் கலந்த குங்குமப் பூ ஃபேஸ்ட். ஃபேஷியல் செய்வதற்கு முன் முதலில் முகத்தை நன்கு கழுவித் துடைக்கவும். பின் முகத்தில் தாடைப் பகுதியில் இருந்து நெற்றிப் பகுதி வரை மெலிதாக மசாஜ் செய்வதைப் போல அந்தப் ஃபேஸ்ட்டைத் தடவவும். முகத்திலிருந்து தாடை மற்றும் முன் கழுத்துப் பகுதி வரை மெலிதாக மசாஜ் செய்து ஃபேஸ்ட் தடவி முடிந்ததும் முகத்தை ஃபேஷியலுடன் 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகம் கழுவி சுத்தமான துவாலையால் துடைத்த பின் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் நிச்சயம் அசந்து தான் போவோம், அத்தனை பள பளப்பாய் பளிச்சிடும் முகம். முகத்தில் சதா எப்போதும் குங்குமப் பூவின் இளஞ் சிவப்பு வண்ணம் வேண்டுமென்போர் வாரம் ஒரு முறை இந்த வகை ஃபேஷியல் செய்து பாருங்கள். பிறகு அதையே நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைப்பீர்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply