கீரை தயிர் வடை

Loading...

%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%88
தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு – 1 கப்,
பொடியாக நறுக்கிய
வெந்தயக் கீரை- 1 கப்,
தேங்காய்த் துருவல் – லீ கப்,
மிளகாய் வற்றல் – 6,
உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள், கடுகு, சீரகம் – தலா 4 டீஸ்பூன்,
எண்ணெய், சர்க்கரை – தலா 1 டீஸ்பூன்,
புளிப்பில்லாத தயிர் – தேவையான அளவு.


செய்முறை:

ஒரு மணி நேரம் ஊறிய துவரம் பருப்புடன், தேங்காய்த் துருவல், மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல், கெட்டியாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ள வும். நன்றாக அலசி வைத்த வெந்தயக் கீரையை அரைத்த விழுதுடன் சேர்க்கவும். உப்பு, மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்துப் போடவும்.
குக்கர் பாத்திரம் அல்லது சிறிய ஆழமான தட்டில் எண் ணெய் தடவவும். அரைத்த கல வையை வடை மாதிரி தட்டி அதில் வரிசையாக வைத்து அதன் மேல் தட்டு மூடி (குக்கரில் ஒரு விசில் கொடுத்து) ஆவியில் வேக வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு அகலமான பாத்திரத் தில் புளிக்காத கெட்டித்தயிர் எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து, கடுகு தாளித்துக் கொட்டவும்.
ஒவ்வொரு வடையாக எடுத்து தயிரில் தோய்த்து தட்டில் வரிசையாக அடுக்கி வைக்கவும். மீதியுள்ள தயிரை, பரவலாக அதன் மேல் ஊற்றிவிடவும். தயிர் வடை தயார். தேவையெனில் கேரட், வெங்காயம் தூவி பரிமாறலாம்.
குறிப்பு: இந்தத் தயிர் வடை எண்ணெய் சேர்க்காமல் ஆவியில் வேகவைப்பதால் பி.பி, கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும் நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply