கிழங்கு ரொட்டி

Loading...

%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b0%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf
தேவையான பொருட்கள்:

கோதுமை மா (Plain Flour) – 1 கோப்பை
பட்டர் 1 மே.க
உப்பு தேவைக்கேற்ப


செய்முறை:

1. மா,பட்டர்,உப்புடன் நீர் சேர்த்து நன்றாக குழைத்து எடுங்கள்.
(சாதாரண ரொட்டியின் பதம்)
2. குழைத்த மாவை சில மணித்தியாலங்கள் வையுங்கள்.
(மாலையில் செய்வதென்றால் காலையில் குழையுங்கள்)
3. மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளுங்கள்.
அப்படியே நில்லுங்க, கறியை ஆயத்தம் செய்வோம்…

கறி


தேவையான பொருட்கள்:

உருளை கிழங்கு 2
வெங்காயம் 1
செத்தல் மிளகாய் 2
சீரகம் 1 தே.க
கடுகு 1/2 தே.க
மஞ்சள் தூள் 1/2 தே.க
மிளகாய் தூள் 1 மே.க
கறிவேப்பிலை 10 இலைகள்
உப்பு தேவையான அளவு
தேசிக்காய் புளி உங்கள் சுவைக்கேற்ப

செய்முறை:

உருளை கிழங்கு, வெங்காயத்தை தோலுரித்து வெட்டி கொள்ளுங்கள். ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை முறையே வதக்குங்கள்.
வதக்கிய கலவையில் உருளைகிழங்கு, தூள்கள், உப்பு சேர்த்து 1 பேணி நீர் சேர்த்து அவிய விடுங்கள். கிழங்கு அவிந்து, நீர் வற்றி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தேசிக்காய் புளி சேர்த்தால் கறி ஆயத்தம் ஆகிவிடும்.
இனி,
மாவை மெல்லிதாக உருட்டி, ஒரு தேவையான அளவு கறியை வைத்து சுற்றுங்கள்.(பெட்டி வடிவம்).
தேசைக்கல்லை சூடாக்கி, ரொட்டியை போட்டு 6 பக்கமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுங்கள்.

தொட்டுக்க:

சட்னி வகைகள்
தக்காளி சோஸ்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply