கலப்பட உணவுகளை எவ்வாறு கண்டறிவது

Loading...

%e0%ae%95%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது.. உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை எப்படி கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது? என்பதை பார்க்கலாம்.

* பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்.
* சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.
* ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள் இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.
* மஞ்சள் தூளில், பருப்பு வகைகளில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.
* மிளகாய் தூளில் மரப்பொடி, செங்கல் பொடி, Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும். செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.
* காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள். குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.
* கொத்தமல்லி(தனியா) தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்
* கிராம்பில் அதன் எண்ணெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணெய் நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply