கருத்தரிக்கும் திறனை அதிகரிக்க என்ன செய்யலாம்

Loading...

%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bfஉலகில் குழந்தைகளை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். குழந்தைகள் பிறப்பது கடவுள் கொடுத்த வரமாக கருதப்படுகிறது.
முன் காலத்தில் திருமணம் முடிந்ததும் தம்பதிகள் உடனே குழந்தைகள் பெற வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆனால் இந்த காலங்களில் சில தம்பதிகள் இரண்டு வருடங்கள் மகிழ்ச்சியாக காலங்களை கடத்தி விட்டு பின் குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர்.

உடல், மனம், ஆரோக்கியம், சூழல், தாது, கரு, கருமுட்டை என்று பல மூலக்காரணிகள் கருத்தரிப்பதற்கு தேவைப்படுவதால், நாம் நினைக்கும் நேரங்களில் குழந்தை வரங்களைப் பெற முடியாது.
கருத்தரிக்கும் திறன் அதிகரிப்பதற்கான காரணம்
சூரியனிடம் இருந்து வரும் வெள்ளிச்சமானது, விட்டமின் Dயை உற்பத்தி செய்வதுடன் கருத்தரிக்கும் திறனை அதிகப்படுத்துகிறது.
விட்டமின் D ஆனது பெண்களுக்கு மாதவிலக்கை ஏற்படுத்தும் பாலின ஹார்மோன்களும், கருவுறும் திறனை கட்டுப்படுத்தும் புரோஜெஸ்டிரோன், ஈஸ்டிரோஜென் ஆகியவற்றின் அளவையும் அதிகரிக்கிறது.
ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையை விட்டமின் D அதிகரிக்கிறது.
பெண்கள் மற்றும் ஆண்களின் மனதில் ஏற்படும் பதட்டம், மன அழுத்தம் போன்றவை பெண்களின் கருவுறும் தன்மையை வெகுவாகப் பாதிப்பதோடு, ஆண்களின் உயிரணு உற்பத்தி வீதத்தையும்குறைக்கிறது.
இதனால் தாம்பத்திய உறவுகளில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
எளிதாக கருத்தரிக்க செய்ய வேண்டியவை
பெண்கள் முழு கொழுப்புள்ள பாலை தினமும் குடித்து வந்தால், மலட்டுத் தன்மையானது 25% க்கு மேல் குறைவாக இருக்கும். இதனால் பெண்களின் கருமுட்டை பைகள் நன்கு வேலை செய்ய வைக்கிறது.
தினமும் உடலுக்கு ஆரோக்கியமான மீன், பழங்கள், காய்கறிகள், போன்ற உணவுகளை பின்பற்ற வேண்டும்.
உடலுக்கு ஆரோக்கியமான உடற்பயிற்சிகளை தினமும் காலையில் செய்து வர வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply