கதம்பச் சட்னி

Loading...

%e0%ae%95%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf

தேவையானவை :-

வரமிளகாய் – 4,
பச்சை மிளகாய் – 2,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி – 1,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுந்து – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்,
பெருங்காயம் – 1 சிறு துண்டு,
வெந்தயம் – கால் டீஸ்பூன்,
கொழுந்து கருவேப்பிலை – 1 கைப்பிடி,
கொத்துமல்லி – 1 கைப்பிடி,
புதினா – அரைக் கைப்பிடி,
இஞ்சி – ஒரு இன்ச் துண்டு,,
பூண்டு – 1 பல்,
உப்பு – அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவியது – 2 டேபிள் ஸ்பூன்,
புளி – 2 சுளை. எண்ணெய் – 2 டீஸ்பூன்.செய்முறை :-

பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக அரியவும்.
தக்காளியைத் துண்டுகள் செய்யவும்.
எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும் பெருங்காயம் வெந்தயம் வரமிளகாய் போட்டு வறுக்கவும்.
அதில் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, உப்பு , புளி போட்டு வதக்கவும். கடைசியாக கருவேப்பிலை கொத்துமல்லி புதினா போட்டு லேசாகப் புரட்டி அடுப்பை அணைத்து விடவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply