கண்களில் கருவளையம் சுருக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு

Loading...

%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95நம் மனதில் தோன்றும் எந்தவித உணர்ச்சியையும் கண்கள் வெளிப்படுத்திவிடும்.
பெண்களின் கண்களில் கருவளையம், சுருக்கம் போன்ற பிரச்சனைகள் அவர்களின் அழகை குறைத்து வயதை அதிகப்படுத்தி காண்பிக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் கருவளையம், அவர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை காண்பிக்கும்.
இந்த கருவளையமானது, சரியான தூக்கம் இல்லாமை, நேரம் காலம் கழித்து தூங்குதல், போதிய நீர் குடிக்காமல் இருப்பது அதிக நேரம் டிவி, மொபைல், புத்தகம் ஆகியவற்றி பார்ப்பது, போன்ற முக்கிய காரணங்களால் தான் வருகின்றது.ஜாதிக்காய்

ஜாதிக்காய் பொடியை பேஸ்ட் செய்து இரவில் தூங்குவதற்கு முன் கண்களைச் சுற்றி தடவி வைத்து இரவு முழுவதும் ஊற வைத்தால், அதில் உள்ள விட்டமின் E மற்றும் C சத்தினால் கருவளையங்கள் காணாமல் போய்விடும்.


தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு

தக்காளி சாறு மற்றும் சிறிது உருளைக் கிழங்கு சாறு இரண்டையும் சம அளவு கலந்து கண்களின் அடியில் தடவி வந்தால் விரைவில் கருவளையம் காணாமல் போகும்.


பாதாம்

பாதாம் பருப்பை பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் விரைவில் கருவளையங்கள் மறைந்து விடுகிறது.எலுமிச்சை சாறு

1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் மசூர் பருப்பு பொடியை அதனுடன் சேர்த்து பேஸ்ட் போல செய்து, கண்களில் உள்ள கருவளயத்தைச் சுற்றி தடவி, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.


கரும்புச் சாறு

2 டீஸ்பூன் மஞ்சள் தூளில் சிறிது கரும்புச்சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் போல செய்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த பேஸ்ட்டை கண்களைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால், கருவளையங்கள் விரைவில் மறைந்துப் போகும்.


புதினா

புதினா இலைகளை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பேஸ்ட் போல செய்து, அதை கண்களைச் சுற்றி தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் கருவளையம் விரைவில் குணமடைகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply