கண்களில் உள்ள கரு வளையம் நீங்க சில வழிகள்

Loading...

%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8dகருவளையம் இப்போதெல்லாம் 16 வயதுகளிலேயே வந்துவிடுகிறது. இரவு கண் விழித்துக் கொண்டிருப்பதால், அதிக நேரம் புத்தகம் படிப்பதால், மன அழுத்தம், வயதாகும்போது வெளிச்சம் மிகுந்த ஒளியில் தொடர்ந்து கண்கள் படும்போது என பலக் காரணங்கள் உள்ளன.
இறந்த செல்கள் கண்களுக்கு அடியில் குவியும்போது அங்கே கருமை படர்கிறது. அதனை போக்குவது எளிதுதான். தகுந்த பிரச்சனையை கண்டறிந்து அதனை சரி செய்ய முற்படுங்கள். கண்களுக்கு போதிய பயிற்சி தருவது மிக முக்கியம். இதனால் நரம்புகள் ஊட்டம் பெற்று ரத்த ஓட்டத்தை கண்களுக்கு அளிக்கின்றன. இது பாதிப்படைந்த செல்களை ரிப்பேர் செய்து கருவளையத்தை போக்குகின்றன.
அது தவிர கண்கள் ஊட்டம் பெறும் வகையில் கொலாஜன் உற்பத்தியை பெறுகச் செய்யும் சில முக்கிய பொருட்கள் இங்கே இடப் பெற்றுள்ளன.அவற்றை உபயோகித்து உங்கள் கண்களை கருவளையத்திலிருந்து பாதுகாக்கலாம்.
1 டீஸ்பூன் உருளைக் கிழங்கின் சாறுடன் 1 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுவை எடுத்து கலந்து கண்களுக்கு அடியில் தடவுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே கண் மூடி படுக்கவும். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் மெல்ல உங்கள் கருவளையம் மறைந்து கண்கள் பிரகாசமாய் தோன்றும்.
பாதாம் எண்ணெய் 5 துளிகள் எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து கருவளையத்தின் மீது தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இது அற்புத பலன்களைத் தரும்.
புதினா சாறை பிழிந்து அதனுடல் தக்காளி சாற்றினை கலந்து கண்களுக்கு அடியில் தடவவும். லேசாக காய்ந்ததும் கழுவி விடவும். 10 நிமிடங்களுக்கு மேல் வைத்தால், சருமம் பாதிப்படையும். ஆகவே லேசாக காய்ந்ததும் கழுவிவிடலாம். இது போல் வாரம் 2 முறை செய்து பாருங்கள். கருவளையம் காணாமல் போய்விடும்.
ஒறேஞ்சு சாறி 1 ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் அளவு கிளசரின் கலந்து பஞ்சினால் நனைத்து கண்களைச் சுற்றிலும் ஒத்தி எடுங்கள். பின் பஞ்சை மேலும் சிறிது அந்த சாற்றில் நனைத்து கண்கள் மேல் வைத்திடவும். 15 நிமிடங்கல் கழித்து கழுவுங்கள். இதனால் கண்கள் பிரகாசமாய் இருக்கும். விரைவில் கருவளையம் மறைந்து விடும்.
புதிய மோர் 1 ஸ்பூன் எடுத்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை கலந்து கண்களுக்கு அடியில் தடவுங்கள். இதனை கண்களுக்கு அடியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரம் 3 முறை செய்து பாருங்கள். கருவளையம் கண்ணிற்கே தெரியாதபட விரைவில் போய் விடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply