கசாட்டா ஐஸ்க்ரீம்

Loading...

%e0%ae%95%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%90%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%ae%e0%af%8d
தேவையானவை:-

பால் – 1 லிட்டர்.
கார்ன் ஃப்ளோர் – 2 டேபிள் ஸ்பூன்,
ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப்,
லிக்விட் க்ளுக்கோஸ் – 2 டீஸ்பூன்.
சீனி – 2 டேபிள் ஸ்பூன்.
வனிலா எசன்ஸ் – சில துளி,
பிஸ்தா பருப்பு – 8,
க்ரீன் ஃபுட் கலர் – சிறிது,
ரோஸ் எசன்ஸ் –சில துளி,
ரோஸ் கலர் – சிறிது,
ட்ரிங்கிங் சாக்லெட் – 2 டீஸ்பூன்.
பிஸ்தா, பாதாம் முந்திரி – மூன்றும் கலந்து வறுத்து சிறு துண்டுகளாக்கியது – 2 டேபிள் ஸ்பூன்.
ஸ்பாஞ்ச் கேக் – மெலிதாக வெட்டி வைக்கவும்.


செய்முறை:-

பாலைக் கரண்டி போட்டுக் காய்ச்சவும்.
கொஞ்சம் திக்காக வரும்போது சிறிது பாலில் கார்ன் ஃப்ளோரைக் கரைத்து ஊற்றி சீனி சேர்த்துக் காய்ச்சவும்.
ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு கரைந்தவுடன் இறக்கி ஆறவைத்து லிக்விட் குளுக்கோஸ் சேர்த்து மிக்ஸியில் ப்ளெண்டரில் போட்டு நன்கு அடிக்கவும்.
நான்கு பாகமாகப் பிரித்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளவும்.
ஐஸ்க்ரீம் ட்ரேயில் முதல் பாகத்தில் ட்ரிங்கிங் சாக்லேட் சேர்த்துக் கரையவைத்து ப்ளண்டரில் நன்கு ஃப்ளஃபியாக அடித்து ஊற்றவும்.
6 மணி நேரம் உறைய விடவும்.
அடுத்த பாகத்தில் வெனிலா எசன்ஸ் கலந்து ப்ளெண்டரில் நன்கு அடித்து சாக்லெட் ஐஸ்க்ரீம் மேல் ஊற்றவும்.
ஆறுமணிநேரம் உறைந்தவுடன்.
பிஸ்தாவை ஊறவைத்து அரைத்து இன்னொரு பாகத்தில் சேர்த்து பச்சைக் கலர் போட்டு ப்ளெண்டரில் அடித்து மூன்றாம் லேயராக ஊற்றவும்.
இன்னும் ஆறுமணிநேரம் உறைந்ததும் மிச்சத்தில் ரோஸ் எசன்ஸும் ரோஸ் கலரும் போட்டு நன்கு ப்ளஃபியாக அடித்து ஊற்றவும்.
அதுவும் ஆறுமணிநேரம் உறைந்து செட்டானவுடன் எடுக்கவும்.
ஒரு ப்ளேட்டில் ஸ்பாஞ்ச் கேக்கை மெலிதாக வெட்டிப் பரப்பவும்.
ஐஸ்க்ரீம் ட்ரேயை வெளிப்புறமாக லேசாக தண்ணீரில் காண்பித்தால் ஐஸ்க்ரீம் ட்ரேயிலிருந்து எடுக்க வரும்.
ஒரு கத்தியால் டிடாச் செய்து ஸ்பாஞ்ச் கேக் மேல் கவிழ்க்கவும்.
பொடித் துண்டுகளாக்கிய நட்ஸ் தூவி கட் செய்து ஐஸ்க்ரீம் கப்புகளில் போட்டுக் கொடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply