ஒரு மணி நேரம் பெடல் செத்தால் ஒருநாளைக்கு தேவையான மின்சாரம்

Loading...

%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4ஒரு மணி நேரம் பெடல் செத்தால் ஒருநாளைக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த சாதனததின் விலை ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஆகும்.
இந்த மிதிவண்டி சாதனத்தை அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர் மனோஜ் பார்கவா தயாரித்துள்ளார். நேற்று இந்த சாதனத்தை டெல்லியில் அறிமுகப்படுத்தினார். இந்த சாதனத்தை பெடல் செய்யும் போது, அதில் உள்ள ஜெனரேட்டர் வழியாக மின்சாரம் உற்பத்தியாகி பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. அதோடு இந்த சாதனத்தை ஒருவர் மிதிக்கும் போது, அவரது உடலில் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகிறது என்பதை காட்டும் வகையிலும் இந்த சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதலில் உத்ரகாண்ட் மாநிலத்தில் இந்த சாதனம் விற்பனைக்கு வருகிறது. இதன் விலைரூ. 12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. இந்த சாதனத்தை ஒரு மணி நேரம் பெடல் செய்தால் 24 மணி நேரத்திற்கு நம் வீட்டிற்கு தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். சிறிய விளக்குகள், மின்விசிறிகள் இயங்க செய்ய முடியும். அதோடு செல்போன் சார்ஜர் செய்து கொள்ளலாம்.
இது குறித்து பர்கவா கூறுகையில், ‘ இது தொடர்பாக ஒரு வருடத்திற்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். ஆனால் அரசுடன் இணைந்து பணியாற்ற எனக்கு விருப்பமில்லை. அதற்காக அவர்கள் மோசமென்று சொல்ல வரவில்லை. ஆனால் திறமையற்றவர்கள். இந்த உலகம் முழுக்க 130 கோடி மக்கள் மின்சாரம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த சாதனத்தை நான் கண்டுபிடித்துள்ளேன் ”என்றார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply