ஐந்தில் ஒரு பங்கு உணவுப் பொருள் கலப்படம்

Loading...

%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8dஉணவுப் பரிசோதனை ஆய்வுக் கூடங்களில் மேற்கொள்ளப்படும் தரப் பரிசோதனையில் ஐந்தில் ஒரு பங்கு உணவுப் பொருள் கலப்படம் மற்றும் போலியானது என தெரியவந்துள்ளது.
நடப்பு 2015-ம் ஆண்டின் நவம்பர் வரையிலான காலத்தில், பல்வேறு மாநிலங்களின் உணவுப் பாதுகாப்பு ஆய்வுக்கூடங்கள், 83,265 உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக பெற்றன. இதில், 74,010 உணவு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
அவற்றில், 14,599 உணவு மாதிரிகளில், கலப்படம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐந்தில் ஒரு பங்கு உணவுப் பொருளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது.
அதிக அளவில் உணவில் கலப்படம் செய்யப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் உள்ளதாக இந்திய உணவு தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply