எலுமிச்சை கொண்டக்கடலை சாதம்

Loading...

%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be
தேவையானவை :-

உதிராக வடித்த சாதம் – 1 கப்,
உப்பு வேகவைத்த கொண்டைக்கடலை – கால் கப்,
எலுமிச்சை – 1 ( சாறு எடுக்கவும். சிறிய எலுமிச்சையானால் 2 பழத்தின் சாறு எடுக்கவும் ).
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
உப்பு – அரை டீஸ்பூன்.
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுந்து – அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்,


வறுத்துப் பொடிக்க :-

வரமிளகாய் – 2,
வெந்தயம் – கால் டீஸ்பூன் ,
பச்சைமிளகாய் – 1,
கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:-

எலுமிச்சை சாறை வடிகட்டி உப்பும் மஞ்சள்தூளும் சேர்த்து வைக்கவும்.
ஒரு பானில் எண்ணெயை ஊற்றிக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து,
கடலைப்பருப்புப் போட்டு சிவந்ததும் பச்சை மிளகாயையும் கருவேப்பிலையையும் போடவும்.
அதில் எலுமிச்சைச் சாறை ஊற்றி ஒரு நிமிடம் கழித்து கொண்டைக்கடலையைப் போட்டு இறக்கவும்.
ஆறியதும் உதிராக வடித்த சாதத்தையும் பொடித்த வரமிளகாய் வெந்தயப் பொடி போட்டு நன்கு கிளறி வைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply