உடல் வலியை போக்கும் மருத்துவ முறைகள்

Loading...

%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4காய்ச்சல் காரணமாகவும், சளியுடன் கூடிய காய்ச்சலாலும் மூட்டு, தசைகளில் ஏற்படும் வலியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். ஆவரை, முருங்கை கீரை, பேய் மிரட்டி ஆகியவை உடல் வலியை போக்கும் மருந்துகளாக பயன்படுகின்றன. ஆவாரையை பயன்படுத்தி காய்ச்சலின்போது ஏற்படும் உடல் வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆவாரை, பனங்கற்கண்டு. ஆவாரையின் இலை, காய், பூ, தண்டு பகுதியை எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி இருவேளை குடித்துவர தசை வலி, உடல் வலி, எலும்புகளில் ஏற்படும் வலி என எந்தவொரு வலியாக இருந்தாலும் குணமாகும்.

காய்ச்சலின்போது ஆவாரை தேனீர் குடித்துவர உடல் வலி சரியாகும். வருகிற குளிர் மற்றும் மழைக்காலங்களில் பொதுவாக உடல் வலி ஏற்படுவதுண்டு. காய்ச்சல் வரும் வாய்ப்பு உள்ளது. காய்ச்சல் வந்தால் வலி கடுமையாக இருக்கும். உடல் வலிக்கு ஆவாரை அற்புத மருந்தாகிறது. சாலையோரங்களில் காணப்படும் ஆவாரை ஆண்டு முழுக்க பூத்துக்குலுங்க கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கிறது. உடைந்த எலும்புகளைகூட ஒட்டவைக்கும் தன்மை கொண்டது.
முருங்கையை பயன்படுத்தி மூட்டுவலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை, பூண்டு, கற்பூரம். ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் முருங்கை கீரை, ஒரு ஸ்பூன் பூண்டு பசை ஆகியவற்றை சேர்க்கவும். கற்பூரத்தை துகளாக்கி சிறிதளவு போட்டு நன்றாக கலக்கவும். கீரை சூடாகி பொங்க ஆரம்பித்தவுடன் எடுக்கவும். இதை ஆறவைத்து இளஞ்சூட்டுடன் மூட்டுகளில் பற்றாக வைத்து துணியை கட்டிவைத்தால் வலி, வீக்கம் குறையும்.
பல்வேறு நன்மைகளை கொண்ட முருங்கை கீரை உடல் வலிக்கு மருந்தாக விளங்குகிறது. முருங்கை கீரைக்கு வலியை போக்கும் தன்மை உண்டு. காய்ச்சலை தணிக்க கூடியது. மருத்துவ குணங்களை உடையை பூண்டு வலி நீக்கியாக பயன்படுகிறது. முருங்கை காய்களை துண்டுகளாக்கி அரைத்து பயன்படுத்தலாம். பேய் மிரட்டி செடியை பயன்படுத்தி காய்ச்சலின்போது ஏற்படும் தசை வலி, மூட்டு வலிக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
விளக்கெண்ணெய், பேய் மிரட்டி இலைகள். ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய்யை தடவவும்.
இதில் வைத்து பேய் மிரட்டி செடியின் இலைகளை வதக்கவும். இந்த இலைகளை எடுத்து இளஞ்சூட்டுடன் மூட்டு வலி உள்ள இடத்தில் வைத்தால் சரியாகும்.
காய்ச்சல் இருக்கும்போது 4 பேய் மிரட்டி இலைகளை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். பல்வேறு நன்மைகளை கொண்ட பேய் மிரட்டி செடி சாலையோரங்களில் இருக்கும். இது துளசியை போன்ற மணத்தை உடையது. நீண்ட இலைகளை கொண்டது. இது வலி நிவாரணியாக பயன்படுகிறது. காய்ச்சலை தணிக்க கூடியது. வலியை குறைக்கவல்லது. கொசு விரட்டியாக விளங்குகிறது. எளிதாக கிடைக்க கூடிய முருங்கை, பேய் மிரட்டி, ஆவாரையை பயன்படுத்தி உடல் வலியை போக்கலாம்.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN