உடல் பருமனைக் குறைக்க சூப்பரான டிப்ஸ்

Loading...

%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%af%82தினமும் வேலைக்குச் செல்லும் சிலரால் அதிக வேலை செய்வதால் ஏற்படும் அசதியின் காரணமாக உடற்பயிற்சிகள் செய்யமுடியாமல் போகிறது.
இதனால் உடல் பருமன் அதிகரித்து விடுகிறது, எனவே உடல் பருமனைக் குறைக்க வேறு வழியே இல்லையா என்று பலரும் வருத்தத்தில் இருப்பார்கள். இனிமேல் உடல் பருமன் பற்றிய கவலையை விடுங்கள்.
உடற்பயிற்சிகள் செய்யாமல் இயற்கையான முறையில் மிகவும் எளிமையாக அதிக உடல் பருமனைக் குறைக்க சூப்பரான டிப்ஸ் இதோ!

நம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில், பொரிக்கப்பட்ட உணவுகள், கடைகளில் பல முறைகள் பயன்படுத்திய எண்ணெயில் தயாரிக்கப்படும் சிப்ஸ், இது போன்ற கெட்ட கொழுப்புகள் அதிகமாக கலந்துள்ள உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். தினமும் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் சத்துக்கள் நம் உடம்பில் உள்ள பல்வேறு நோய்கள் மற்றும் கொழுப்புகள் சேர்வதை தடுக்கிறது. நம்முடைய அன்றாட உணவுகளில் தினமும் அதிக புரதச் சத்துக்கள் கொண்ட உயர் ரக புரத உணவுகளான மீன், முட்டை, சீஸ், பனீர் ஆகிய உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நம் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிகக் விடாமல் தடுக்கிறது. நாம் தினமும் சமைக்கும் போது ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். இதிலுள்ள நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. தினமும் நன்றாக சிரிப்பதால் நம் உடலின் ஒட்டுமொத்த தசைகளும் இயங்குகின்றன. இதனால் மன அழுத்தம் விலகி, கெட்ட கொழுப்பை குறைந்து, வளர்சிதை மாற்றம் வேகமாக நடைபெறுகிறது. வாரம் ஒருமுறை நட்ஸ்களை ஒரு கப் அளவு சாப்பிட்டு வந்தால், நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து, எப்போதும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply