உடல் எடையை அதிகரிக்கும் மருத்துவ முறைகள்

Loading...

%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8dமெலிந்த தேகம் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் சற்று பருமனாவது குறித்து பார்க்கலாம். வெண்பூசணி, உலர் திராட்சை, வேர்க்கடலை, எள், அஸ்வகந்தா சூரணம் ஆகியவை உடல் எடையை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டவை. இவைகளை பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கும் முறைகளை காணலாம்.

வெண்பூசணியை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெண்பூசணி, உலர் திராட்சை, வெல்லம், நெய். வெண்பூசணியின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு சதை பகுதியை பசையாக்கி கொள்ளவும். உலர்ந்த திராட்சையை நீர்விட்டு ஊறவைத்து அரைத்து வெண்பூசணி பசையுடன் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் எடுக்கவும். இதில் நீர்விட்டு பாகு பதத்தில் கொதிக்க வைக்கவும். இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் வெண்பூசணி, உலர் திராட்சை விழுதை சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும். இதனுடன் நெய் சேர்த்து நன்றாக கிளறினால் அல்வா பதத்தில் வரும். இதை காலை, மாலை வேளையில் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வர உடல் எடை கூடும். ஒட்டிய முகம் தெளிவு பெறும்.
பல்வேறு நன்மைகளை கொண்ட பூசணிக்காய் நல்ல மருந்தாகி பலன் தருகிறது. இதனுடைய சாற்றை அன்றாடம் வெறும் வயிற்றில் குடித்துவர வயிற்று புண்கள் சரியாகும். வெண்பூசணி உஷ்ணத்தை குறைக்கும் தன்மை கொண்டது. வெள்ளைப்போக்கு பிரச்னைக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. வெண்பூசணி லேகியம் சித்த, ஆயுர்வேத மருத்துவ கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி பயன்படுத்தலாம்.
வேர்க்கடலை, எள் ஆகியவற்றை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வேர்க்கடலை, எள், அவல், நெய். வேர்க்கடலையை வறுத்து தோலை நீக்கிவிட்டு பொடி செய்து எடுக்கவும். இதேபோல், எள்ளை பொடி செய்து கொள்ளவும். வெல்லத்துடன் வேர்கடலை பொடி, எள்ளுப்பொடி, சிவப்பு அரிசி அவல் பொடி சேர்த்து கலந்து அப்படியே சாப்பிடலாம். நெய்விட்டு உருண்டைகளாக பிடித்து லட்டு போன்றும் சாப்பிடலாம்.
இதை தினமும் சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்கும். நிலக்கடலை, எள் ஆகியவற்றில் அதிக சத்துக்கள் உள்ளன.
அஸ்வகந்தா சூரணத்தை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: அஸ்வகந்தா சூரணம், நெய், உலர் திராட்சை, பால், பனங்கற்கண்டு. ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் நெய் விடவும். இதில் 5 முதல் 10 உலர்ந்த திராட்சைகளை போடவும்.
உலர் திராட்சை பொறிந்ததும் சிறிது அஸ்வகந்தா சூரணம் சேர்க்கவும். இதில், நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இது கெட்டித்தன்மை அடையும்போது காய்ச்சிய பால் சேர்க்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர உடல் எடை கூடும். அனைத்து வயதினரும் இதை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இதை கொடுத்துவர அவர்களுக்கு உடல் ஆரோக்கியம் அடையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply