உடல் இளைக்க ஓர் எளிய வழி

Loading...

%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bfஇளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்குக் கொள்ளு‘ எனக் கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. உடல் இளைத்தவர்கள் எள்ளை உட்கொண்டால் உடல் தேறுவார்கள் என்றும், உடல் கொழுத்தவர்கள் (தொந்தி போட்டவர்கள்) கொள்ளினைச் சாப்பிட்டால் உடல் இளைப்பார்கள் என்பதும் இதன் பொருள்.

கொள்ளிற்கு உடலின் ஊளைச்சதை மற்றும் கொழுப்பினைக் கரைக்கும் ஆற்றல் உண்டு. இதனால் கொள்ளினை ரசமாகவோ சூப்பாகவோ அடிக்கடி சாப்பிடுவதால் உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த பலனைக் கொடுக்கும் என்பதால் கொள்ளினைக் கொண்டு உடல் பருமனைக் குறைத்திட சூப் செய்யும் முறை ஒன்றினைப் பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:

>> கொள்ளு 50 கிராம்
>> வெங்காயம் 100 கிராம்
>> கோழி இறைச்சி 100 கிராம்
>> இஞ்சி 25 கிராம்
>> பூண்டு, உப்பு, கொத்தமல்லி இலை தேவையான அளவு
கொள்ளினை வறுத்துப் பின் நீர் ஊற்றி அவித்துக் கொள்ளவும். இறைச்சியை அவித்தெடுத்து, அத்துடன் இஞ்சி பூண்டு அரைத்துச் சேர்த்து வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து எடுத்து அவித்த கொள்ளையும் சேர்த்து மீண்டும் குக்கரில் 3 விசில் அவித்து, கொத்தமல்லி இலையை வெட்டிப்போட்டு சூப்பாகத் தயாரித்து உண்ணவும். இந்தச் சூப்பினை இரவு நேரத்தில் உண்பதைத் தவிர்க்கவும்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply