உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சூப்பரான உணவுகள்

Loading...

%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9fஉடலின் ஆரோக்கியம் குறித்த அக்கறை அனேகமான நபர்களுக்கு இருந்தாலும், எதை சாப்பிடுவதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

அதிகளவில் அரிசி உணவுகள், சோடா பானங்கள், வெள்ளைச் சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
கடல் உணவுகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால், தேவையான சத்துக்களை பெற்று ஆரோக்கியமாக இருக்கலாம்.
உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டியவைகள்
நாம் அன்றாடம் உணவில் உயர் ரகச் சத்துக்கள் கொண்ட தாவர வகைகள், முழுத்தானிய உணவுகளான அரிசி, கோதுமை உணவுகளை விட, காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
செரிமானத்தை சரிசெய்யும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
முட்டை மற்றும் தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்ற பால் வகை உணவுகளை குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நம் உடம்பில் புரதச்சத்தை அதிகரிக்க மீன் மற்றும் நாட்டுக்கோழி இறைச்சிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ரெட் மீட் எனப்படும் இறைச்சி வகை உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
நம் அன்றாட உணவில் தினமும் சர்க்கரை அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

Loading...
Rates : 0
VTST BN