உடல்நலத்தை பொக்கிஷமாக பேணி காக்க நானோ டெக்னாலஜி

Loading...

%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%af%87மனிதர்களின் உடல்நலத்தை பொக்கிஷமாக பேணி காக்க மெடிக்கல் நானோ டெக்னாலஜி பெரிதும் உதவுகிறது.
இது ஒரு பொருளின் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் அளவை கட்டுப்படுத்துவது குறித்த படிப்பாகும்.
இந்த நானோ தொழில்நுட்பம் மருத்துவம், வேதியல், விவசாயம், சுற்றுசூழல் போன்ற பல விதமான துறைகளில் பயன்படுகிறது.
நுண்ணிய அளவிலான ரோபோக்கள், சென்சார்கள் ஆகியவற்றை கண்டுபிடித்து மருத்துவத்துறையில் பயன்படுத்துவது மற்றும் மனித உடலை துளையிடாமல் சிசிச்சை அளிப்பது போன்ற பல அரிய விடயங்கள் இந்த நானோ டெக்னாலஜி படிப்பில் இருக்கின்றது.
மெடிக்கல் நானோ டெக்னாலஜி மூலம் நோயாளி இடலில் குறிப்பிட்ட பகுதியில் நானோ அளவுடைய பொருட்கள் மூலம் மருந்து செலுத்தி குணமடைய செய்யலாம்.
புதிதாக உருவாக்குதல், கட்டுப்படுத்துதல் போன்ற பல அரிய விடயங்களை நானோ டெக்னாலஜி மூலம் செய்யலாம்.
கற்றுக்கொள்ளும் ஆர்வமும், புதிய கோணத்தில் பார்க்கும் திறனும் இருப்பவர்கள் இத்துறையை தேர்ந்தெடுக்கலாம்.
முதுகலை படிப்பான எம்.டெக் மெடிக்கல் நானோ டெக்னாலஜி ஐந்து வருடம் கொண்ட பட்டப் படிப்பாகும்.
இந்த படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.
வெளிநாடுகளில் பெரிய மருத்துவமனைகள், ஆய்வு கூடங்களில் வேலை வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.
DNA மெடிசன் இன்ஸ்டியூட், பிலன்ட் தெரபாஸிஸ் போன்ற மிகப்பெரிய மருத்துவ நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply