உடற்பயிற்சி இல்லாமலேயே உடலில் கெட்ட கொழுப்பை குறைக்கனுமா இந்த 6 வழிகளை கடைபிடிங்க

Loading...

%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%af%87-%e0%ae%89உடற்பயிற்சி என்பது உடலுக்கும் உறுப்புக்களும் வலிமை தரக் கூடியது. ஆனால் அரக்கபரக்க கிளம்பும் காலை நேரத்திலோ, அசதியாய் திரும்பும் மாலைகளிலோ, உடற்ப்யிற்சி செய்ய முடிவதில்லை என சொல்பவர்கள் ஏராளம். ஆனால் போதிய உடல் உடல் உழைப்பு இல்லாவிட்டால் உடல் பருமன், அதிக கொழுப்பு அதிகரித்துவிடுமே. இதனை குறைக்க குறைந்தபட்சம் ஏதாவது ஒரு முயற்சி வேண்டுமல்லவா? என்ன செய்யலாம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.

பொரிக்கப்பட்ட
பதார்த்தங்களுக்கு நோ :

பொரிக்கப்பட்ட நொறுக்குத் தீங்களில் கெட்ட கொழுப்பு மிக அதிக அளவில் இருக்கும். கடைகளில் பலமுறைபயன்படுத்திய எண்ணெயிலேயே சிப்ஸ், போன்றவற்றை செய்கிறார்கள். இவை பல ஆபத்தான நோய்களை தரும் என்பதில் எள்ளளவில் சந்தேகக் வேண்டாம். ஆகவே இதற்கு தடா போடுங்கள்.


பழங்கள், காய்கறிகள் :

நிறைய பழம், மற்றும் காய்கறிகளை சாப்பிட்டாலே போதும், உடற்பயிற்சி தேவையே இல்லை. இவற்றிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் பல்வேறு நோய்களையும் கொழுப்புகள் சேர்வதையும் தடுக்கிறது.


புரத உணவுகள் :

அதிக புரத உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உயர் ரக புரத உணவுகளான மீன், முட்டை, சீஸ், பனீர் ஆகியவை உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிகக் விடாமல் தடுக்கும்.


ஆலிவ் எண்ணெய் :

ஆலிவ் எண்ணெயில் சமைத்திடுங்கள். இது அதிக நிறைவுறா கொழுப்பு அமிலங்களை கொண்டது. இவை கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இதய நோய்கள், ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும்.


வாய்விட்டு சிரியுங்கள் :

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பது அந்த காலத்தில் சொன்ன ஆச்சரியமான உண்மைகளில் ஒன்று. சிரிப்பதால் உங்கள் உடலின் ஒட்டுமொத்த தசைகளும் இயங்குகின்றன. மன அழுத்தம் குறைகின்றன. கொழுப்பை குறைக்கும் வகையில் வளர்சிதை மாற்றம் வேகமாக நடைபெறும்.


நட்ஸ் அதிகம் சாப்பிடுங்கள் :

நட்ஸ் தினமும் சாப்பிடுங்கள். வாரம் ஒரு கப் அளவு எடுத்து வைத்து, அதனை வாரம் முழுவதும் சிறிது சிறிதாக சாப்பிட்டு வாருங்கள். ஏனென்றால் வாரம் ஒரு கப் அளவு சாப்ப்பிட்டு வந்தால் கொழுப்பு குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும் என ஆராய்ச்சி கூறுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply