உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தும் இந்த எளிய பொருட்களைப் பற்றி தெரியுமா

Loading...

%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%86%e0%ae%b4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%af%81உங்கள் சருமம் எத்தகையதாக இருந்தாலும் அழுக்குகள், இறந்த செல்கள் சரும துவாரங்களை அடைத்துக் கொள்ளும். இதனால் தோல் சுவாசிப்பதற்கு வழியில்லாமல் தனது பொலிவை இழக்கிறது. அதற்கான மிக எளிய இயற்கையான குறிப்புகள்

உங்கள் சருமத்தை சுத்தப்படுத்த சோப், ஃபேஸ் வாஷ் மற்றும் ஸ்க்ரப் கிளென்ஸர் என பல உபயோகிப்பீர்கள். இவை உண்மையில் சுத்தப்படுத்துவதைக் காட்டிலும் உங்கள் தோலின் மேல் சுரக்கும் இயற்கையான எண்ணெயை அவை அழிக்கின்றன. இதனால் சருமம் மேலும் வறண்டு சுருக்கங்களை உண்டாக்குகின்றன. உண்மையில் கடைகளில் கிடைக்கும் ஸ்க்ரப் உபயோகிப்பதால் சருமம் பாதிப்புதான் அடைகிறது.
இயற்கையான பொருகளால் எந்த வித சரும பாதிப்பின்றி உங்கள் துளைகளுக்குள் ஒளிந்திருக்கும் அழுக்கு இறந்த செல்களை அகற்றலாம். சில எளிய வழிகளை இங்கே பார்க்கலாம்.

யோகார்ட் :

தினமும் யோகார்ட் இரு ஸ்பூன் எடுத்து முகத்தில் தேய்த்து கழுவுங்கள். முகத்தை சுத்தப்படுத்துவதோடு, சருமம் பாதிப்படைவதை தடுக்கும்

தக்காளி :

தக்காளி சிறந்த கிளென்ஸர். எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு அருமையான மருந்து. தக்காளியின் சாறை முகத்தில் தேய்த்து காய்ந்த பின் கழுவிப் பாருங்கள். முகம் தகதகக்கும். வறண்ட சருமம் இருப்பவர்கள் இதனுடன் சிறிது தேன் கலந்து கொள்ளலாம்.

பப்பாளி :

பப்பாளி எல்லா சருமத்திற்கும் ஏற்றது. பாதிபப்டியந்த சருமத்தை சீர் செய்யும். பப்பாளியை வாரம் 3 நாட்கள் உபயோகித்தால் போதுமானது. பப்பாளியை மசித்து முகம் கழுத்துப் பகுதியில் தேய்த்து 5 நிமிட கழித்து கழுவவும். ஆழமான அழுக்குகளும் நீங்கி முகம் சுத்தமாகும்.

ஸ்ட்ரா பெர்ரி :

இது இளமையான சுருக்கமில்லாத சருமத்தை தரும். அழுக்கு இறந்த செல்களை ஆழமாக ஊடுருவிச் சென்று அகற்றும். ஸ்ற்றா பெர்ரியை மசித்து முகத்தில் போடவும். காய்ந்ததும் கழுவி விடுங்கள்.

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோல் :

இது இயற்கையான ஸ்க்ரப். முகப்பரு, இருப்பவர்களுக்கு ஏற்றது. எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள். தினமும் முகத்தில் தேய்த்து கழுவினால் முகப்பருக்கள் ஓடிவிடும்.

கடலை மாவு :

கடலை மாவு மிகச் சிறந்த அழுக்கு நீக்கியாகும். கடலை மாவை தினமும் காலை மாலை என இரு வேளைகளில் முகத்தில் தேய்த்து கழுவுவதால் தூசி துரும்பு இல்லாமல் முகம் பளிச்சிடும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply