இறால் பச்சை மிளகாய் வறுவல்

Loading...

%e0%ae%87%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5

தேவையான பொருட்கள்

இறால் – 1 /2 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
பொடியாக நறுக்கிய பூண்டு – 8 பல்
கீறிய பச்சைமிளகாய் – 6 – 8 (காரத்திற்கு தகுந்தாற்போல்)
மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 மேசைக்கரண்டிசெய்முறை

இறாலை தலை மற்றும் குடல் நீக்கி, தேவையெனில் மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம்
செய்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
சுத்தப்படுத்திய இராலைச் சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்.
இந்நிலையில் மிளகுத்தூள், தேவையான அளவு உப்புச் சேர்த்து நன்கு கிளறி வேக விடவும்.
இறால் வெந்தவுடன், விருப்பமெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து விடலாம்.
மல்லித்தழை தூவி பரிமாறவும்.


குறிப்பு

இறாலை வேக வைத்தும் பயன்படுத்தலாம். பச்சையாக சேர்க்கும்போது மஞ்சள்தூள் சேர்த்தால் நீச்ச வாசனை இருக்காது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply