இந்த தீபாவளிக்கு உங்கள் அழகை கண்டு அனைவரும் மயங்கணுமா

Loading...

%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8dஇதோ, இந்த வருஷமும் தீபாவளி வந்தாச்சு! தீபாவளிக்காக புதுத் துணிகள், பட்டாசுகள், பலகாரங்கள் என்று பரபரன்னு பர்ச்சேஸ் செய்துக் கொண்டிருப்பீர்கள். இன்னும் சிலர் வீட்டிலேயே பலகாரங்களைச் செய்வதிலும், வீட்டை அழகுப்படுத்துவதிலும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களைக் கவனிப்பதிலும் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். அதே சமயம் களைப்பாகவும் உணர்வீர்கள்.

இவ்வளவு அலுப்பு சலுப்புகளுக்கிடையிலும் நீங்கள் அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, எப்போதும் சுறுசுறுப்பாகவும் அழகாகவும் உங்களைக் காட்டிக் கொண்டால் தானே நல்லது! உங்கள் தீபாவளியும் களை கட்டும்!! இதோ அதற்கான சில டிப்ஸ்…


கண்கள் மிளிர…

உங்கள் களைப்பு எதுவும் வெளியில் தெரியாமலிருக்க, முதலில் உங்கள் கண்களை அழகாக அழகுப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு மெலிதாகவும் அழகாகவும் கண்களுக்கு மை தீட்டுங்கள். பொதுவாகவே இந்தியப் பெண்களுக்கு கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தான் கண் விழிகள் இருக்கும். அதற்கு அவர்கள் கோல்டு, ப்ரவுன், சார்கோல் கருப்பு அல்லது க்ரே கலர் ஷேடோக்களைப் பயன்படுத்தினால் கலக்கலாக இருக்கும். தேவைக்கேற்ப மஸ்காராவையும் அப்ளை செய்து கொண்டால் களைப்பு ‘காணாமல்’ போகும்.உதடுகள் ஜொலிக்க…

உங்கள் உதடுகளைப் பளபளப்பாக வைத்துக் கொள்வது அவசியம். நியூட்ரல் அல்லது பிங்க் ஷேடோக்களால் ஆன லிப்ஸ்டிக்குகளைத் தடவிக் கொள்ளுங்கள். இன்னும் அதிகம் கவர வேண்டுமென்றால், கொஞ்சம் அடர்த்தியான ஷேடோக்களைப் பயன்படுத்துங்கள்.முகம் பொலிவு பெற…

கண்களில் மஸ்காரா அப்ளை செய்திருப்பதால், அதற்கேற்றவாறு மெல்லிய பவுடரையும் முகத்தில் அழகாகத் தீட்டிக் கொள்ளுங்கள்.கைகளுக்கு மருதாணி..

ஆயிரக்கணக்கான டிசைன்களில் ஒரு அழகான மெஹந்தி டிசைனைத் தேர்ந்தெடுத்து, கைகளில் மெஹந்தி போட்டுக் கொள்ளுங்கள்.பாரம்பரிய உடையில் மின்னுங்கள்..

ஆண்டு முழுவதும் சுடிதார், சல்வார், ஜீன்ஸ், டி-சர்ட் என்று நவநாகரீக உடைகளை அணிந்து வந்தாலும், தீபாவளிக்கு மட்டும் சும்மா நச்சென்று ஒரு புத்தம் புதிய சேலையைக் கட்டிக் கொள்ளுங்கள். அதுவும், பாரம்பரிய பட்டுச் சேலையை உடுத்திக் கொண்டு நீங்கள் வலம் வந்தால் உங்களுக்கே ஒரு சுறுசுறுப்பு தொற்றிக் கொள்ளும். நீங்கள் அணிந்திருக்கும் உடைகளுக்குத் தக்கவாறு உங்கள் கண்களுக்கும் உதடுகளுக்கும் ஷேடோக்களைப் பயன்படுத்திக் கொள்வது முக்கியம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply