ஆலு போஹா

Loading...

%e0%ae%86%e0%ae%b2%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b9%e0%ae%beஅவல் – 2 கப் (20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து பிழிந்தெடுக்கவும்),
கடுகு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கிராம்பு – 2,
பட்டை – 2,
நறுக்கிய பச்சைமிளகாய் – 3,
பெரிய வெங்காயம் – 1/2 கப்,
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
மஞ்சள் தூள் – 3/4 டீஸ்பூன்,
வேகவைத்த உருளைக்கிழங்கு – 1 கப் (உரித்து சதுர வில்லைகளாக வெட்டியது),
வேகவைத்த பச்சைப் பட்டாணி – 1/2 கப்,
உப்பு – தேவைக்கு,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 3/4 கப்,
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

எண்ணெயை சூடாக்கி கடுகு, பட்டை, கிராம்பு, சேர்த்து வெடிக்க விடவும். வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கவும். மஞ்சள் தூள், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி, தண்ணீர் 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். அவல், உப்பு, சர்க்கரை, எலுமிச்சை சாறு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக கிளறி, கொத்தமல்லித்தழை தூவி சூடாக பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply